Tuesday, October 23, 2007

வாழ்த்துக்கள்!!

<>வாழ்த்துச் செய்தி<>

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்


(சி.பி.சி.) பொதுச்செயலராக
சீன அதிபர் ஹு ஜின்டாவ்(64) மீண்டும்



தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு
என்னினிய வாழ்த்துக்கள்!




இரண்டாவது முறையாக இப்பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள,
இவர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு


அதாவது 2012 ஆம் ஆண்டுவரை
இப்பதவியில் நீடித்திருக்கும் காலகட்டத்தில்


இந்தியா சீனா நட்புறவு
மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன்.



சீனாவின் அதிபராக இருந்துவரும் ஹு ஜின்டாவ்,
அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
அவரது வலிமையையும் செல்வாக்கையும்
உறுதிப்படுத்தியுள்ளது.

சீன ராணுவ முப்படைகளின் தலைமை கமாண்டராகவும் அவர் நீடிப்பார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அனைத்து முக்கிய முடிவுகளையும்
இறுதிசெய்யும் அதிகாரம் படைத்த தலைமைக் குழுவின் தலைவராக
ஹு ஜின்டாவ் செயல்படுவார். இக்குழுவில் வு பாங்குவோ, வென் ஜியாபாவ், ஜியா ஜிங்லின், லீ சாங்குன், ஜிங்பிங், லீ கெகியாங், ஹி குவோஜியாங், ஜோவ் யாங்காங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்,
இவர்களுக்கும் என்னினிய வாழ்த்துக்கள்!!

சீனா பின்பற்றிவரும் தன்னிச்சையான வெளியுறவுக்
கொள்கைகள் தொடரும். சமூக சமத்துவம்,
அனைவருக்கும் சமநீதி ஆகிய கொள்கைகள்
தொடர்ந்து பின்பற்றப்படும்.

சீனாவின் சூழ்நிலைக்கு ஏற்ப சமதர்ம கொள்கைகள்
நடைமுறைப்படுத்தப்படும்.

அனைத்து நாடுகளுடனும் பஞ்சசீல கொள்கைகளின்
அடிப்படையில் நட்புறவும் ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்படும்.
உலகில் அமைதி தவழ்ந்து நிம்மதி நிலவ வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய‌ ஹு ஜின்டாவ்
அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள்
அவ‌ர‌து ஆழ‌மான‌ சிந்த‌னையையும் தொலைநோக்குப் பார்வையையும் ந‌ம்மால் உண‌ர‌முடிகிற‌து.

Monday, October 15, 2007

<>17வது தேசிய மாநாடு துவங்கியது<>


17th CPC National Congress opens



உல‌க‌மே உன்னிப்பாக சீனாவைக் கண்மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

என்ன காரணம்?
சீனாவில் ந‌டைபெறும் 17வது தேசிய மாநாடுதான் கார‌ண‌ம்!

அந்த‌ அள‌வுக்கு முக்கிய‌த்துவ‌த்தை ஏற்ப‌டுத்தி உல‌க‌த்தின்

க‌வ‌ன‌த்தை ஈர்த்திருக்கிற‌து. எதிர்கால‌த் திட்ட‌ங்க‌ள் என்ன‌
என்று அறிந்துகொள்வ‌திலும், பொருளாதாரத் திட்டமிடுதல்,
வெளிநாட்டு உறவுமுறை போன்றவற்றில் அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலே
காரணம்!

2,200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட
17வது தேசிய மாநாட்டில்,"12 பகுதிகள் அடங்கிய‌
அறிக்கையில்....

"சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச மாபெரும் கொடியை
ஏந்தி, ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக
உருவாக்குவதில் புது வெற்றி காண பாடுபடுவது" என்பது
உட்பட, கடந்த 5 ஆண்டுகால பணியை மீளாய்வு செய்தல்,
கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்துள்ள சீர்திருத்தம்
மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் வரலாற்று முன்னேற்ற போக்கை தொகுத்தல், அறிவியல் வளர்ச்சி கண்ணோட்டத்தின் உள்ளடக்கத்தையும்,
சீன வளர்ச்சிக்கான இதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக்
கூறுதல், சீனப் பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம்,
பாதுகாப்பு, தூதாண்மை, நாட்டின் ஒன்றிணைப்பு, கட்சியின்
கட்டுமானம் முதலிய துறைகளிலான எதிர்கால பணிகளை
ஏற்பாடு செய்தல் ஆகியவை இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.

16வது தேசிய மாநாடு நடைபெற்ற பின், சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைமையில், சீன மக்கள் அனைவரும் பெற்றுள்ள சாதனைகளை அறிக்கையில் ஹூ சிந்தாவ் தொகுத்து அவர் கூறியதாவது:"கடந்த 5 ஆண்டுகாலம், சீர்திருத்தம் மற்றும்
வெளிநாட்டு திறப்புப் பணியிலும், ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்குவதிலும் மாபெரும் முன்னேற்றம் காணப்பட்ட 5 ஆண்டுகாலமாகும். சீனப் பொருளாதார ஆற்றல் பெருமளவில் உயர்ந்துள்ளது.
மக்களின் வாழ்க்கை தெள்ளத்தெளிவாக மேம்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. சமூகக்
காப்பீட்டு முறைமையின் உருவாக்கம் மேலும் வலுப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார முறைமையும், அடிப்படை மருத்துவ சேவையும் மேம்பட்டுள்ளன. கிராமங்களில் இலவச கட்டாயக் கல்வி பன்முகங்களிலும் நனவாகியுள்ளது" என்றார், அவர்.

அறிக்கையில், 2020ஆம் ஆண்டுக்குள் சீன வளர்ச்சியின்
புதிய இலக்குகளை அவர் முன்வைத்தார். நபர்வாரி உள்நாட்டு
உற்பத்தி மதிப்பு, 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட 3 மடங்கு அதிகரிக்க வேண்டும். நகர-கிராம மக்களுக்கு வழங்கப்படும்
சமூக காப்பீட்டு முறைமை அடிப்படையில் உருவாக்கப்பட
வேண்டும். வறுமை அடிப்படையில் ஒழிக்கப்பட வேண்டும்.
அடிப்படை மருத்துவ சேவையை அனைவரும் அனுபவிக்க
வேண்டும். எரியாற்றல் மற்றும் மூலவளத்தின் சிக்கனப்
பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு,
அதிகரிப்பு முறை, நுகர்வு மாதிரி அடிப்படையில்
உருவாக்கப்பட வேண்டும் என்பன பொருளாதாரக் கொள்கை
பற்றி குறிப்பிடுகையில், சீனாவின் நகரங்களுக்கு, கிராமங்களுக்கிடையிலும், பல்வேறு வட்டாரங்களுக்
கிடையிலும் மக்களுக்கு வழங்கப்படும் பொதுச் சேவை
சமமற்ற நிலைமையின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இத்துறையில் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று ஹூ
சிந்தாவ் வலியுறுத்தினார்.

பண்பாட்டு மற்றும் சமூக கட்டுமானம் பற்றி குறிப்பிடும்
போது பொது நலன் தன்மை வாய்ந்த பண்பாட்டு லட்சியத்தை வளர்ப்பதை, மக்களின் அடிப்படை பண்பாட்டு உரிமை மற்றும்
நலனை உத்தரவாதம் செய்வதற்கான முக்கிய வழியாக கொள்வதில் உறுதியாக நின்று, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவின் ஜனநாய அரசியல் பற்றி ஹூ சிந்தாவ் கூறியதாவது:
"மக்கள் ஜனநாயகம், சோஷலிசத்தின் உயிராகும். பல்வேறு நிலையிலும், துறைகளிலும், அரசியல் விவகாரத்தில் பொது
மக்களின் ஒழுங்கான பங்கெடுப்பை விரிவாக்க வேண்டும்.
சோஷலிச ஜனநாயகம் மற்றும் சட்டச் செயல்பாடு, சுதந்திரம்
மற்றும் சமம், நியாயம் மற்றும் நேர்மை என்ற கருத்தை
நிலைநாட்ட வேண்டும்" என்றார், அவர்.தைவான் பிரச்சினை
பற்றி பேசுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,
ஓரே சீனா என்ற கொள்கையின் அடிப்படையில், இரு கரை பகைமையை அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதற்கான கலந்தாய்வு
நடத்தி, அமைதி உடன்படிக்கையை உருவாக்க வேண்டும் என்று
அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தூதாண்மை உறவு பற்றி ஹூ சிந்தாவ் கூறியதாவது:
"அமைதி வளர்ச்சி என்ற பாதையில் சீனா உறுதியாக முன்னேறி, பரஸ்பரம் நலன் அளிக்கும் திறப்பு நெடுநோக்கு திட்டத்தை உறுதியாக கடைப்பிடித்து, தனது நாட்டின் வளர்ச்சியை நனவாக்குவதோடு, இதர நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்" என்றார், அவர்.கட்சி உட்புறத்தில் ஜனநாயக் கட்டுமானத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்களையும் விதிகளையும் மீறும் வழக்குகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக கண்டறிந்து கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Wednesday, December 06, 2006

<>தமிழ் பிரிவின்தலைவர் வாழ்த்துரை....!<>


தமிழ் பிரிவின்

தலைவர் வாழ்த்துரை....!


2006年听众代表大会贺词


மதிப்புக்குரிய பெரியோர்களே,


அன்புமிக்க நண்பர்களே வணக்கம்.


அனைத்திந்திய சீன வானொலி தமிழ்

நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு

வெற்றிகரமாக நடைபெறுவதற்கு

நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கருத்தரங்கில் விருந்தினராக அழைக்கப்பட்டு

சிறப்புடன் கலந்து கொண்டுள்ள பெரியோர்கள்

அனைவருக்கும் நேயர்களின் சார்பிலும்

தமிழ்ப் பிரிவின் அனைத்து பணியாளர்களின்

சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாண்டு சீன இந்திய நட்புறவு ஆண்டாகும்.

இரு நாட்டு உயர் நிலை பரிமாற்றம் இவ்வாண்டு அதிகரித்துள்ளது. எங்கள் அரசுத் தலைவர்

ஹுச்சிந்தாவ் இந்தியாவில் பயணம் செய்தார்.

இந்திய உயர் அதிகாரிகளும் இவ்வாண்டில்

சீனாவில் பயணம் செய்துள்ளனர்.


இந்த நட்பார்ந்த சூழ்நிலையில் நமது நேயர்

மன்றத்தின் 18வது கருத்தரங்கு நடைபெறுகின்றது. இதற்கிடையில் சீன வானொலி நிறுவப்பட்ட

65வது ஆண்டு நிறைவு விழா, அனைத்திந்திய

சீன வானொலி தமிழ் நேயர் மன்றம்

உருவாக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு விழா,

தமிழ் ஒலிபரப்பின் 43வது ஆண்டு நிறைவு விழா

ஆகிய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.


2004ம் ஆண்டு ஜுலைத் திங்கள் முதல் தமிழ்

ஒலிபரப்பின் கட்டமைப்பு அரை மணியிலிருந்து

ஒரு மணி நேரமாகி தற்போது இரண்டு

ஆண்டுகளாகிவிட்டது. கடந்த இரண்டு

ஆண்டுகளில் குறிப்பாக கடந்த ஓராண்டில்

ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளின் தரம் உயர்ந்துள்ளது.


இந்த முன்னேற்றத்தின் சிறப்பு இந்தியாவிலிருந்து

சீனாவுக்கு வந்து தமிழ்ப் பிரிவில் நிபுணராக வேலை

செய்த திரு ராஜாராம், திரு கிளிடஸ் ஆகியோரைச்

சாரும். அவர்களின் உதவியுடனும் ஆதரவுடனும்

எங்கள் நிகழ்ச்சிகளின் அம்சங்களும் தரமும்

உயர்ந்துள்ளன.


குறிப்பாக நட்பு பாலம் நிகழ்ச்சி மூலம் பெய்சிங்கில் பணிபுரிகின்ற தமிழர்களின் குரல் உங்களால் கேட்க

முடிகின்றது. சீன பண்பாடு சீன உணவு அரங்கம்,

நலவாழ்வு பாதுகாப்பு, சீனாவில் இன்ப பயணம்

முதலிய நிகழ்ச்சிகள் நேயர்களால் மிகவும்

வரவேற்கப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.


தமிழ்பிரிவின் இணைய தளத்தின் வளர்ச்சியிலும்

மாபெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இப்போது இணையத்தின் மூலம் சீன இசை பாடல்கள் செய்தித் தொகுப்புகள் ஆகியவற்றை படிப்பதோடு ஒலி வடிவத்தில் கேட்கவும் முடியும். பல்வகை நிழற்படங்களுடன் கூடிய கட்டுரைகளும், செய்திகளும் தினந்தோறும் சீனாவின் வளர்ச்சியை அறிவிக்கின்றன.


தமிழ்ப் பிரிவில் பணியாளர்கள் குறைவாக

இருந்த நிலையிலும் நேயர்களிடமிருந்து கிடைத்த கடிதங்களையும் நேயர் பணியுடன் தொடர்புடைய வேலையையும் கையாள்வதற்கு சிறப்புப் பணியாளர்

ஒருவரை ஒதுக்கியுள்ளோம்.


திங்களுக்கு 41 ஆயிரத்து 300 கடிதங்களை

கையாண்டால்தான் வானொலி விதித்த கடித

கடமையை நிறைவேற்ற முடியும்.

ஆகவே நேயர் பணிக்கென ஒருவர் மட்டும்

இருக்கின்ற நிலையில் நேயர்களுக்கு சேவை

புரிவதில் குறை நிலவுவது திண்ணம்.


எடுத்துக்காட்டாக தாமதமாக பதில் கடிதம்

அளிப்பது, கடிதம் எழுதிய ஒவ்வொரு நேயருக்கும்

பதில் எழுதாமல் இருப்பது போன்ற குறைகள்

நிலவுகின்றன.


ஆகவே இந்த குறைகளுக்காக இங்கே உங்களிடமிருந்து மன்னிப்பு கேட்கின்றேன்.
எதிர்காலத்தில் சீன வானொலி நிலையத்தின்

தமிழ்பிரிவின் ஒலிபரப்புப் பணி கண்டிப்பாக வளரும்.


தமிழ் படிப்பை முடித்து கொண்டு பட்டம் பெற்ற

மாணவர்கள் தமிழ்ப் பிரிவின் பணியில் சேர்ந்த

பின் எமது தமிழ்ப் பிரிவின் பணித் தரம்

மேம்படுத்தப்படும். அப்போது பல்வகை புதிய

நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிகளை

அதிகரிக்க விரும்புகின்றோம்.


இறுதியாக எங்களுக்கும் நேயர்களுக்குமிடையிலான

நட்பு இமய மலை போல நீடுழி வாழ வேண்டும்

என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.
அன்புடன்,
தி. கலையரசி.

தலைவர்,

தமிழ் பிரிவு,

சீன வானொலி.

<<>>இயக்குனர் வாழ்த்துரை<<>>





சீன வானொலி
இயக்குனர் வாழ்த்துரை...!

2006年台长大会贺词

கருத்தரங்கிற்கான இதயப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்...!

-- வுகாங் கன் நியன் 8-11-06
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர்
மன்றத்தின் 18வது கருத்தரங்கு நடைபெறும்
வேளையில் என் சார்பிலும் சீன வானொலி
நிலையத்தின் அனைத்து பணியாளர்களின்
சார்பிலும் கருத்தரங்கு வெற்றிகரமாக
நடைபெறுவதற்கு நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாண்டு சீன-இந்திய நட்புறவு ஆண்டாகும்.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஆயிரம்
ஆண்டுகளுக்கு அதிகமான நட்பு வரலாறு
நிலவுகிறது. பண்டைக் காலம் தொட்டு புத்த
மத பண்பாட்டால் இந்த இருநாடுகளும்
நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

சீன புத்த மதத் துறவி சியான்ச்சான் இந்தியாவில்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்து புத்த மதத்தை
ஆராய்ந்தார். இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகமும்
இரு நாட்டுறவின் வளர்ச்சி வரலாற்றில் முக்கிய
அத்தியாயமாக திகழ்கின்றது.

சீன-இந்திய நட்புறவு ஆண்டான இவ்வாண்டில்
இந்தியாவில் பணி பயணம் செய்வதற்காக சீன
வானொலி பிரதிநிதி குழு இந்தியாவுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.

இரு நாட்டுறவை வளர்ப்பதற்கு பங்கு ஆற்றும்
வகையில் தமிழ்ப் பிரிவு சீன-இந்திய நட்புறவு
ஆண்டு என்னும் கட்டுரை போட்டி ஏற்பாடு செய்தது.

இதில் 200க்கும் அதிகமான நண்பர்கள்
பங்கெடுத்தனர். அத்துடன் சிறந்த கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கட்டுரைகள் வானொலி
மூலம் ஒலிபரப்பட்டன என்பதை நான் கேட்டறிந்து
மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இங்கே நண்பர்களுக்கு நன்றியையும்
பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நண்பர்களாகிய உங்களின் முயற்சியினால்
தமிழ்ப் பிரிவுக்கு வந்து சேர்ந்த கடித எண்ணிக்கை
சீன வானொலியில் நேயர் பணியின் முன்
வரிசையில் உள்ளது. இங்கே நான் வானொலித்
தலைவர்களின் சார்பில் உங்களுக்கு நன்றி
தெரிவிக்கின்றேன்.

நடப்புக் கருத்தரங்கில் என்னால் கலந்து
கொள்ள முடியாதது எனக்கு வருத்தம் தான்.
ஆனால் ஈரோடு தமிழ் நேயர் மன்றத்தின்
உதவியுடன் தலைமை செயலர் பல்லவி
கே பரவிபரமசிவன் உள்ளிட்ட பொறுப்பாளர்களின்
உளமார்ந்த முயற்சியுடன் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதை கண்டு இதயப்பூர்வமான மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற
வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகின்றேன்.
சீன-இந்திய நட்பு நீடுழி வாழ்க!

தமிழ் நேயர் மன்றப் பணி பொங்கி வளர்க!!

உங்கள் வாழ்க்கை தேன் போல இனிமையாக
அமைக!!!

நன்றி!
வணக்கம்
வுவான் கன் நியன்
சீன வானொலி இயக்குனர்.






*********************************************************





<>ஐம்பெரும்விழா சிறப்பு வாழ்த்துரை...!<>






-ஆல்பர்ட் பெர்னாண்டோ,


தலைவர்,


சீன தமிழ் வானொலி நேயர்மன்றம்,


அமெரிக்கா.





நெஞ்சம் இனிக்கும் இந்த ஐம்பெரும்விழாவிற்கு


வருகைதந்துள்ள சீன வானொலி பிரதிநிதிகள்


நால்வரையும் என் சார்பிலும் அமெரிக்க


நேயர்மன்றத்தின் சார்பிலும் இருகரம் கூப்பி


வருக, வெல்க, வாழ்கஎன வாழ்த்திடுவதில்


மகிழ்வெய்துகிறேன்.





என்னுடல் மட்டும் அமெரிக்காவில்!


என்னுள்ளமெலாம் இந்தக் கஸ்தூரிபா


கலையரங்கில்தான்!





இந்திய - சீன நட்புறவு ஆண்டுவிழா...


நமதுசீன வானொலி பிரதிநிதிகள் திட்டமிட்டபடி


இங்கே வருவதில் சிறுதடை விசா பெறுவதில்


இருந்தும், "அருவினை யென்ப வுளவோகருவியாற்


காலமறிந்து செயின்" என்ற வள்ளுவப் பெருந்தகையின்


"What is impossible for right means at the RIGHT TIME"


என்பதற்கொப்ப தடைகளைத் தகர்த்து


இங்குவந்திருக்கிறார்கள், நம்தமிழ் பிரிவு தலைவர்


கலையரசி அம்மையார்அவர்களும் மற்ற பிரதிநிதிகளும்!





சீனாவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவை..நட்பை ஆண்டுவிழாவாகக் கொண்டாடுகிறோம்.


சீன- இந்திய நட்பு இன்று நேற்று ஏற்பட்டதுஅல்ல;


சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்பாகபண்டைக்கால


சீனாவின் புகழ்பெற்ற பண்பாட்டுத்தூதர் துறவி


யுவான் சுவாங் காலத்தில் முகிழ்த்தது!





கி.பி627ல் யுவான் சுவாங்க் இந்தியாவில் அப்போது


புகழ்பெற்று விளங்கிய நாளந்தா பலகலைக்கழகத்தில்


கல்வி பயில தமது 27ம் வயதில் கால்நடையாக....


பொடிநடையாக காடுமேடு வனாந்திரங்களைக்கடந்து


அன்றைய சீனாவின் சாங் ஆனிலிருந்துஅதாவது


இன்றைய மத்திய சீனாவின்"சீ ஆன்" நகரிலிருந்து


மனித நடமாட்டமில்லாத பாலைவனங்களையெல்லாம்


கடந்து பல்விதஇன்னல்களைக் கடந்து கி.பி.629ம் ஆண்டு வடஇந்தியாவிற்கு வந்தார்.


(அப்படிப்பட்ட சிரமங்கள் ஏதும் இன்றி இன்றைக்குநமது சீன வானொலிப் பிரதிநிதிகள் இங்குவந்துள்ளனர். )





நாளந்தா பல்கலைக்கழகத்தில் தம் வண்ணக்


கனவுகளுக்கு உயிர் கொடுத்தார் சுவாங்!


எண்ணிவந்ததைவிட நம் பண்பாடும்


விருந்தோம்பலும் அவரைப் பல்லாண்டுகள்


தங்கவைத்த நட்புறவுப் பூமி இது!





அவர் எழுதிய நூல்களே இதற்குச் சான்று.


பாஹியான் போன்ற யாத்ரிகர்களும் தங்கள்


எழுதிய வரலாற்றுக்குறிப்புகள் நமது சீன-இந்திய


நட்பை விரிவாக எடுத்து இயம்புகிறது.





சீன தேசத்தில் புகழ்பெற்ற நாவல்,"மேற்கிற்கு


சுற்றுலா"இந்த நாவலின் கதாநாயகன்


"தாங் சான் ச்சாங்"என்ற பாத்திரம்


சீன-இந்தியா நட்பை விலாவாரியாய் விவரிக்கிறது!





அப்போது முகிழ்த்த உறவில் இடையில் சிறுவிரிசல்


கண்டாலும் கடல் வாணிகத்தின் மூலம் இருநாட்டு


உறவுகளுக்கும் அப்போதே சிறகு முளைத்ததை


எவராலும் மறுத்துவிடமுடியாது!





இரண்டு தேசங்களும் மிகப்பழைய பாரம்பரியங்களுக்குச் சொந்தமானவை!


இரண்டு வேறுபட்ட நாகரிகங்களிலிருந்து கிளைத்தவை!


இரு தேசங்களுமே கிராமப்புறங்களும் விவசாயிகளையும் மிகுதியாகக் கொண்டவை!


அதிவேக நவீனத் தொழில்நுட்பத்தோடும், தொழிலும் வணிகமும் புரிபவை!


பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்பவை!


ஒருசேர முன்னிலை வகிப்பது உலகின் அதிக மக்கள்


தொகையில்!பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய சீன வணிக மதிப்புரூ.500 கோடி! இதுவே 2005ல் ரூ.8,500 கோடி!


நடப்புஆண்டில் இதுவே ரூ.90ஆயிரம் கோடியாகும்


என மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2010ல் இதன் இலக்குரூ.2.25


இலட்சம் கோடியென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





இதனால்தான் இருதேசங்களும் நட்பை வளர்த்து


தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டியது அத்தியா


வசியம்என்று கருதியதால்தான் சீனத்தலைவர்


ஹ¥ சிந்தாவ்இந்தியா வந்ததும்,"கையோடு கை சேர்த்து ஒத்துழைப்பை விரிவாக்கி, அருமையான எதிர்காலத்தை


கூட்டாக உருவாக்குவது" என்ற அவரது சொற்பொழிவு!





சீன-இந்திய நட்புறவு, இரு தரப்புகளுக்குச் சாதகமானது!





ஆசியாவிற்கும் உலகிற்கும் நன்மை பயக்கும்; சீன-இந்திய


உறவு இருதரப்பு வரம்பைத் தாண்டி, உலக முக்கியத்துவம்


வாய்ந்தது என்ற அவரது உரை அவரது மனவெளிப்பாடு


மட்டுமல்ல; இரு தேசத்தின் நட்புறவில் மலர்ந்த காலத்தின்


தேவை கருதிய சத்தியமான வார்த்தைகள் என்பதில் எள் முனையளவும் அய்யமில்லை!





இருதேசங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பரஸ்பர


நம்பிக்கையின் அடையாளமாக


சிக்கிம் மாநிலத்தினையும் சீனாவின் திபெத் சுயாட்சிப்


பகுதியையும் இணைக்கும் நாதுல்லா கணவாய் கடந்த


44 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலைத் திங்கள் 6ம்


நாள் திறக்கப்பட்டதில் இந்த உறவுக்கு புதியபாலம்


உதயமாகியுள்ளது தொடரும் என்ற பேருவகையை நமக்கு அளிக்கிறது.





சீன-இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய தருணமிது என்றால்


அது மிகையில்லை.சீன வானொலியின் 65ம்


ஆண்டுவிழா!





பீகிங் வானொலியாய் உதயமாகி BE-KING போலஉலக வானொலிகளின் அரசனாக வீர நடைபோட்டு 40க்கும்


மேற்பட்ட அந்நிய மொழிகளில்அட்டகாசமாய் உலகை வலம்வருகிறது! உலக நேயர்களிடமிருந்து வரும் நேயர் கடிதங்களின்எண்ணிக்கை உலகின் வேறு எந்த


வானொலிக்கும்வராத மிக அதிக அளவில் வந்து


குவிகின்றது.இதுவே அதன் பலம்!





அதன் வெற்றி!சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில்


இது ஒரு சரித்திரச் சாதனை மைல் கல்!சீன வானொலி துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப்பின் தமிழ் பிரிவு


துவக்கப்பட்டு 43 விழுதுகள்விட்டு பழுதுகள் இல்லாமல்


பணி தொடர்ந்துஇன்றைக்கு சீன வானொலி தமிழ் பிரிவு


தலைவர் திருமதி.கலையரசி அம்மையாரயும் மற்ற


மொழிப் பிரதிநிதிகளையும் தமிழகம் நோக்கி எத்தனை


தடை வந்தாலும் அதையும் தாண்டி தமிழ்நேயர்களைச்


சந்திப்போம் என்று ஈங்குவந்துள்ளதே இதன் வெற்றியை பறைசாற்றுகிறது என்பது அப்பழுக்கற்ற உண்மை!





தமிழகத்தில் நானறிந்தவரை நடிகநடிகையர்களுக்கு


ரசிகர்மன்றங்கள் இருக்கிறது. நற்பணிமன்றங்கள்


இருக்கின்றன. ஆனால் வானொலிக்காக நேயர்கள்


இருக்கலாம்; மன்றங்கள் இருக்கிறதா என்றால்நிச்சயமாக


இல்லை என்றே சொல்லலாம்.வானொலியின் விவசாய நிகழ்ச்சிக்காகமட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக


முகம் காட்டிக்கொண்டிருக்கிற சூழலில் அகில இந்திய சீன வானொலியின் தமிழ் நேயர்மன்றங்கள் தமிழகமாவட்டங்கள்





தோறும் ஏற்படுத்தப்பட்டிருப்பதுசீன வானொலி மட்டுமே என்றுஅறுதியிட்டுஉறுதியாகச் சொல்ல முடியும்!


இதற்கு காரணம் அ.இ.சீன வானொலி தலைமைமன்றத் தலைவர்வளவனூர் திரு.செல்வம் மற்றும்அதன் நிர்வாகிகள்


மற்றும் நேயர்மன்ற தலைவர் பொறுப்பாளர்களையே


சாரும்!





இவர்களின்தூண்டுதலால் ஆர்வமாய் சீன வானொலியைச்செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துநேயர்மன்றங்கள் உருவாகி உற்சாகநடை


போடுகின்றன.





இப்படிப்பட்ட தன்னார்வலர்களால் உருவாகியநேசமிகு நேயர்மன்றங்களை ஒருங்கிணைத்து ஓரமைப்பாக..


பேரமைப்பாக ஏற்படுத்தி அகிலஇந்திய சீனவானொலி


நேயர்மன்றம் துவங்கித் தொய்வின்றி தொடர்ந்து துள்ளல் நடைபோட்டு20 நிதர்சன ஆண்டுகளைக் கடந்து


வாலிபமுறுக்கோடு திகழ்வதைக் கொண்டாடுகிறோம்.





இதன் மூலவராய் உற்சவமூர்த்தியாய்த் திகழும்வளவனூர்


செல்வம் அவர்களுக்கு இந்தநேரத்தில்பலத்த கரவொலி எழுப்பி அவருக்கு உற்சாகம் ஊட்டுவோம்!





அ.இ.சீன.வானொலி நேயர்கள் மன்ற 18வது கருத்தரங்கு! உற்சாகப் பெருவெள்ளமாய் இதோ!





இந்தக் கருத்தரங்கம் என்பது தேனூறும் நிகழ்வன்றோ!


இங்கு அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு நேயரும்மத்தாப்பூவாய்


மலர்ந்து சிரிக்கும் முகங்களோடு!சீன வானொலித் தமிழ் பிரிவுத்தலைவர் நம் பாசமும்நேசமும் நிறைந்த திருமதி


கலையரசி என்ற ஜு ஜுவான் குவா மற்றும் சீன வானொலி தென்ஆசிய மொழிப்பிரிவு துணைத்தலைவர் திரு.சுன்ஜியான் ஹி, நேபாள பிரிவு தலைவர் திருமதி.ஜங் யு,சிங்கள மொழிப்பிரிவு துணைத்தலைவர் செங் லிஆகியோர் நம் விருந்தினர் என்று அவர்களை வரவேற்று உபசரிக்கும் உத்வேகத்தோடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் இக் கருத்தரங்கில் வீற்றிருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனதினிய அன்பு மலர்த்தூவல்கள்!





இந்த ஐம்பெரும் விழா இங்கே அமைந்திட இரவு பகல்


பாராது உழைத்து கண்களில் மின்னும் களைப்பையும்


சோர்வையும் மீறி இதழ்கடை முறுவலோடு பம்பரமாய்ச் சுறுசுறுப்போடு சுழலும் பல்லவி.கே.பரமசிவன்


அவர்களுக்கான என் அடிமனத்து வாழ்த்துக்களோடு


எழுப்புங்கள் உங்கள் கரவொலிதனை!





அடுத்த கருத்தரங்கத்திற்கு முன்பாக நேயர்மன்றம்


இல்லாத மாவட்டங்களில் அருகிலுள்ள மாவட்டத்தைச்


சேர்ந்த நேயர்மன்றம் பொறுப்பெடுத்து நேயர்மன்றத்தை உருவாக்கவும், நேயர்மன்றம் இல்லாத மாவட்டமே


இல்லையென்ற நிலை உருவாக்கிடவும் முன்வரவேண்டும்


என்ற வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிற அதே வேளை,


நான் முன்னமேஅளித்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு நேயர்மன்றத்துக்கும் ஒவ்வொரு இணையப்பக்கத்தைஉருவாக்கித் தருவேன் என்ற மகிழ்ச்சியானசெய்தியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.





இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் சீன வானொலியை


உடனுக்குடன் எட்டும் வகையில் இருக்கும்!





மீண்டும் இந்த ஐம்பெரும் விழா வெற்றிபெறவும்


இதற்கு மூல காரணமாய் இருக்கும் உங்கள்


அனைவருக்கும் என்னினிய வாழ்த்துக்கள்.


நன்றி.


(ச்சியே..ச்சியே)


வணக்கம்!


ஆல்பர்ட் பெர்னாண்டோ,
தலைவர்,
சீன தமிழ் வானொலி நேயர்மன்றம்,
அமெரிக்கா.

Wednesday, November 29, 2006

<<>>ஈரோடு ஐம்பெரும்விழா-படங்கள்<<>>

நவம்பர் 26ம்தேதியன்று
ஈரோடு மாவட்டம்
திண்டல்
வேளாளர் மகளிர்
கல்லூரியில்
கஸ்தூர்பா கலையரங்கில்
அனைத்திந்திய சீன
வானொலியின் தமிழ்
நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு வெகு
சிறப்பாக நடைபெற்றது.




காலை 10மணிக்கு

அனைத்திந்திய சீன

வானொலியின்

தமிழ் பிரிவு தலைவர்

திருமதி.கலையரசி

அம்மையார் உட்பட

நான்கு பிரதிநிதிகளும்


மேளதாளத்தோடு தமிழகக் கலாச்சாரப்படி விழா மேடைக்குஅழைத்துச் செல்லப்பட்டனர். பரதநாட்டியத்துடன் ஐம்பெரும்விழா துவங்கியது. சக்தி மசால நிறுவன இயக்குனர் திருமதி சாந்தி துரைசாமி குத்து விளக்கேற்றியது நேயர்களுக்கு புத்தொளியூட்ட, விழாவிற்கு வந்திருந்த வர்களை வரவேற்று அகில இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற பொருளாளர் திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம் தலைமையுரை நிகழ்த்தினார். வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி சந்திரா தங்கவேலு முன்னிலை வகித்தார்.












தொடர்ந்து சீன வானொலி தலைவர் உரை
வாசித்தளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர் திருமதி
கலையரசி அவர்கள் உரைநிகழ்த்தினர்கள்.
தொடர்ந்து ஈரோடு மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரி திரு.பி.குப்புசாமி,
முன்னாள் சீன வானொலி நிபுணர்
முனைவர் திரு.ந.கடிகாசலம் உட்படமாவட்ட
செஞ்சிலுவை சங்க கெளரவ செயலாளர் மற்றும்
பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு
கருத்தரங்கை வாழ்த்திப் பேசினர்.

நேயர்களுக்கு நினைவுப்பரிசும் மலரும்
சீன வானொலிப் பிரதிநிதிகள் வழங்கினர்.
பெருந்துறை அபெக்ஸ் பள்ளியின்
மாணவமாணவியரின் கலைநிகழ்ச்சிகள்
நடனம் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக
அமைந்தது.


நாமக்க்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாம்
வகுப்பு மாணவியின் நடனத்தால் ஈர்க்கப்பட்ட
நேபாளப்பிரிவு தலைவர் திருமதி.ஜங் யு
அவர்களும் அந்த மாணவியுடன் சேர்ந்துகொண்டு
நடனமாட நேயர்களின் கரவொலி விண்ணைத்
தொட்டது!
மேலும், சீனத் தேயிலை பற்றிய அழகான சீன
மொழிப் பாடல் ஒன்றையும் அவர் பாடினார்.
நேபாள மொழிப்பிரிவுத் தலைவர்
அவர்கள் சீன வானொலியின் நடனக்குழுவில்
இடம்பெற்றுள்ளவர்
அதனைத் தொடர்ந்துதொடர்ந்து

சீன வானொலி அமெரிக்க நேயர்மன்றத்
தலைவர் சி.எஸ்.ஆல்பர்ட் பெர்னாண்டோவின்
வாழ்த்துரை வாசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட நேயர்களில் ஒருபகுதியினருக்கு சீன வானொலி அனுப்பி வைத்த Magic Calculator நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கருத்தரங்கு தொடர்பான சிறப்பு மலரும் நேயர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
மதிய உணவிற்குப்பின்னர் கருத்தரங்கு நிறைவினை எய்தியது.


ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை
உள்ளிட்ட பலமாவட்டங்களில் இருந்து சுமார் 500 நேயர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் விழுப்புரத்தில் நேயர்கள் சீன வானொலிப்பிரதிநிதிகளுக்கு மல்லிகை மாலை சூடி சிறப்பான வரவேற்பை நல்கினர். ஈரோட்டில் சக்தி மசாலா நிறுவனத்துக்கு சீன வானொலிப் பிரதிநிதிகள் விஜயம் செய்தனர். நிறுவன இயக்குனர் நிறுவனத்தை பிரதிநிதிகளுக்கு சுற்றிக் காண்பித்தார்.


பிரதிநிதிகளுடன் பல்லவி கே.பரமசிவன், வளவனூர் எஸ்.செல்வம் மற்றும் புதுவை நேயர்மன்றத் தலைவர் பாலக்குமார்,
சேந்தமங்கலம் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம் தலைமையில் புதுவை நேயர்மன்றத்தலைவர் திரு.பாலக்குமார், பொருளாளர் திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன், திரு.நாச்சிமுத்து, திரு.ராஜகோபால் உட்பட வரவேற்பளித்தனர்.





ஈரோடு சக்தி மசாலா
நிறுவனத்தில்.

உடன் சக்தி மசாலா

அதிபரின் மகன்....!





கல்லூரி முதல்வர்
அறையில்...!







கொங்கு சமுதாய பண்பலை நிலைய ஒலிப்பதிவுக் கூடத்தில் சீன வானொலிபிரதிநிதிகளுடன்திரு.செல்வம்,
திரு.பல்லவி கே.பரமசிவன் மற்றும்
சேந்தமங்கலம்எஸ்.எம்.ரவிச்சந்திரன்
ஆகியோர்!









சீன வானொலிப் பிரதிநிதிகள்

கல்லூரி வளாகத்தில்.....!




பெருந்துறை வேளாளர் கல்லூரி


வளாகத்தில் மரம் நடும்

நிகழ்ச்சியில்


தமிழ் பிரிவு தலைவர்

திருமதி கலையரசி....!





விழுப்புரத்தில் செய்தியாளர்கள்
சந்திப்பில்
சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர்
திருமதி கலையரசி




பயணக்குழுவினர்(இடமிருந்து வலமாக.. நேபாள மொழிப்பிரிவுத் தலைவர் திருமதி. ஜங் யூ,
தமிழ்ப்பிரிவுத் தலைவர் திருமதி. க‌லைய‌ர‌சி, ஆசியத்துறை துணைத் தலைவர் சுன் ஜியான் ஹி மற்றும் சிங்கள மொழிப் பிரிவு துணைத் தலைவர் செங் லீ ஆகியோர்.







விழுப்புரத்தில் நேயர்கள்


அளித்த வரவேற்பு








சென்னையில் தங்கியிருந்த
விடுதியில் சீன வானொலி தமிழ் பிரிவு
தலைவர் திருமதி கலையரசி, அகில
இந்திய சீன வானொலி நேயர்கள் மன்ற
தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம்



ராஜகோபால்,
எஸ்.எம்.இரவிச்சந்திரன்,


நாச்சிமுத்து ஆகியோருடன்
அகில இந்திய சீன வானொலி
நேயர்கள் மன்ற
தலைவர் வளவனூர் திரு.எஸ்.செல்வம்

Thursday, November 09, 2006

<<>>ஈரோடு கருத்தரங்க தேதி மாற்றம்<<>>

கடந்த நவம்பர் 8-11-06 புதன்கிழமை
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில்
சீன வானொலி தமிழ் பிரிவின்
தலைவர் திருமதி.தி.கலையரசி அவர்களும்
பெருந்துறை பல்லவி பரமசிவன் அவர்களும்
நிகழ்த்திய உரையாடலை இங்கு
சீன வானொலி - தமிழ் நேயர்களுக்காக
மீண்டும் எழுத்துவடிவில் தருகிறேன்.
-ஆல்பர்ட், அமெரிக்கா.















கலையரசி :- வணக்கம் நேயர்களே! இன்றைய

கேள்வியும் பதில் நிகழ்ச்சியில் முக்கியமாக

பெருந்துறை கே. பல்லவி பரமசிவன் மற்றும்

கலையரசி ஆகிய நானும் அனைத்திந்திய சீன

வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது

கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற வேண்டும்

என்று திட்டமிடப்பட்டுள்ளது. அது பற்றிய

விபரம் நாங்கள் இருவரும் நேயர்களுக்கு

அறிமுகப்படுத்துவோம்..முதலில்

வணக்கம் பரமசிவம்!



பரமசிவம் :- வணக்கம். திருமதி கலையரசி

அம்மையார் அவர்களே!

கலை :- கடந்த வாரம் கேள்வி பதில்


நிகழ்ச்சியில் அனைத்திந்திய சீன

வானொலி நேயர் மன்ற கருத்தரங்கம்

நடத்துவது பற்றி நேயர்களுக்கு

அறிமுகப்படுத்தினோம். அப்படித்தானே!

பரம :- ஆமாம்.


கலை :-
இப்ப சூழ்நிலை அங்கு கஷ்ட்டம்.

விசா பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது.

அதனால் திட்டமிட்டபடி சென்னைக்கு

16ம் தேதி வரமுடியாமல்
தள்ளிப்போடப்பட்டுள்ளது.

பரம :- மாற்றப்பட்டுள்ளது.

கலை:-
ஆமாங்க.. ஆகவே கருத்தரங்கம்
ஒருவாரம் தள்ளிப்போடவேண்டும்.

பரம:- நாம் ஏற்கனவே விவாதித்தபடி,

ஒருவார காலம் கருத்தரங்கம் தள்ளி

வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம்தேதியன்று

ஈரோடு மாவட்டம் திண்டல் மலை வேளாளர்

மகளிர் கல்லூரியில் கஸ்தூரிபா கலையரங்கில்

அனைத்திந்திய சீன வானொலியின் தமிழ்

நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு

நடைபெற இருக்கிறது.

உங்கள் பயணதிட்டம் திட்டமிட்டபடி இல்லாத

காரணத்தால், ஒருவார காலம் தள்ளி நவம்பர்

திங்கள் 26ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை


9மணிக்கு நடைபெறவிருக்கிறது.

மீண்டும் கூறிக்கொள்வது, வருகின்ற 26ம்தேதி

காலை 9மணிக்கு அனைத்திந்திய

சீன வானொலியின்

கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் திண்டல்

மலை, வேளாளர் மகளிர் கல்லூரியில்

கஸ்தூரிபா கலையரங்கில் ஐம்பெருவிழாவாக,

அதாவது,

இந்திய சீன நட்புறவு ஆண்டுவிழா!


சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!


சீன வானொலி தமிழ் பிரிவின் 43ம்

ஆண்டுவிழா!


அனைத்திந்திய சீன வானொலி

தமிழ் நேயர்மன்றத்தின்

20வது ஆண்டுவிழா!



அனைத்திந்திய சீன வானொலி

தமிழ் நேயர்மன்றத்தின் 18வது

கருத்தரங்கு விழா!

என்று ஐம்பெரும்விழாவாக மிகச் சிறப்பாக

நடைபெற இருக்கிறது. நமது சீன வானொலியின்

தமிழ்பிரிவு தலைவர் திருமதி கலையரசி அம்மையார்

உள்ளிட்ட சீன வானொலி பிரதிநிதிகள் நான்குபேர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

இவர்களோடு ஈரோடு மாவட்ட முக்கிய
பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க
இருக்கிறார்கள். எனவே நம் சீன வானொலியின்
அனைத்து நேயர்களும் தவறாமல் இந்த ஐபெரும்
விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்
என்று இந்தவாய்ப்பை பயன்படுத்தி அன்போடு
நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கலை:- பரமசிவம்..இதுவரை கருத்தரங்கம்

நடத்த ஆயத்தமாக இருக்கிறீர்களா?

பரம :- கிட்டத்தட்ட பெரும்பகுதி பணிகளை

நிறைவு செய்து இருக்கிறோம். நான் ஏற்கனவே
கேள்வி பதில் நிகழ்ச்சியில் அறிவித்தபடி சிறப்பு
மலர் பணிகள் 90 சதம் நிறைவடைந்துள்ளது. விழா
அழைப்பிதழ்கள் தங்கள் ஒப்புதலுக்காகக்
காத்திருந்தது.


இன்னும் ஒரு சில நாட்களில் அழைப்பிதழ்
அச்சடிக்கப்பட்டு அனைத்து சீன வானொலியின்
அந்தந்த மாவட்ட நேயர் மன்றங்களுக்கும்
பொறுப்பாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுவிடும்.
ஏற்கனவே அறிவித்தபடி உங்களை வரவேற்க சீன
வானொலி நேயர்களும் நேயர்மன்ற பொறுப்பாளர்களும்
தயாராக காத்திருக்கிறோம். இந்த ஐம்பெரும் விழா மிகவும்
சிறப்பான முறையில் நடைபெறவிருக்கிறது என்ற
மகிழ்ச்சியான செய்தியை மீண்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலை :-
அப்படியிருந்தால், நேயர்களுக்கான் அறிவிப்பு
தேதியை நம் சீன வானொலி தமிழ் மன்ற நேயர்களுக்கு அறிவிக்க வேண்டும் அல்லவா?

பரம :- ஆம். ஏற்கனவே கருத்தரங்கம்

ந‌டைபெறும் அழைப்பின் மாதிரியை தங்களுக்கு
அனுப்பி சீன வானொலி மூலம் நேயர்களுக்கு
அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டிருந்தோம்.
இப்போது தேதி மாற்றப்பட்டுள்ளதால் தேதியை
நவம்பர்மாதம் 26ம்தேதி ஞாயிற்றுக்கிழமை
என்று மாற்றி நீங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.


கலை :- ஆம்! பரமசிவம் கருத்தரங்கம் பற்றி

கொஞ்சம் நேயர்களுக்கு சொல்லுங்களேன் ?

பரம:- இந்தக் கருத்தரங்கத்தைப் பொறுத்தவரை
சிறப்பாக நாங்கள் கருதுகின்றோம்.
காரணம்,
இந்திய-
சீன நட்புறவு ஆண்டுவிழா!

சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!
சீன வானொலி தமிழ் பிரிவின் 43ம் ஆண்டுவிழா!
அனைத்திந்திய சீன வானொலி நேயர்மன்றத்தின்
20வது ஆண்டுவிழா!
அனைத்திந்திய சீன வானொலி நேயர்மன்றத்தின்
18வது கருத்தரங்கு விழா!
என்று ஐம்பெரும்விழாக்கள்
ஈரோடு மாவட்டம் திண்டல் மலை
வேளாளர் மகளிர் கல்லூரியில் கஸ்தூரிபா
கலையரங்கில் காலை
9மணி முதல் மாலை 4.30 மணி
வரை சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்தக் கருத்தரங்கில் சீன வானொலியின்
பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பது
இந்தக் கருத்தரங்கிற்கு இன்னும்
மெருகூட்டுவதாய் அமையும்.


இந்த அடிப்படையில் நேயர்கள் எங்களுக்கு
முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம். காரணம் என்ன
வென்றால் இந்தக் கருத்தரங்கம் சிறப்பாக
அமையவேண்டும் என்றால் அதற்கு முக்கியப்
பொறுப்பு அனைத்து சீன வானொலி நேயர்களும்
நேயர்மன்ற பொறுப்பாளர்களும் ஆவார்கள்.
நீங்கள்அளிக்கும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு
உண்டு என்பதில் எந்த அய்யமும் இல்லை.

கலை :- ஆம். நீங்கள் முன்பு சொன்னது

மாதிரி 5 பிரம்மாண்டமான விழாக்களை
ஒரே மேடையில் கருத்தரங்கில் நடை
பெறவேண்டும் என்று சொன்னீர்கள். இதற்கு
நேயர்கள் எந்த மாதிரியான உதவி அளிக்க
வேண்டும் என்றால் நேயர்மன்ற நேயர்கள்
அனைவரும் கருத்தரங்கில் கலந்துகொண்டு
சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் முதல் உதவி!
அப்படித்தானே?


பரம:- ஆமாம். நேயர்கள் நேயர்மன்றங்களிடமிருந்து

வேறு எந்த உதவியும் நாங்கள் எதிர்பார்க்க
வில்லை; நேயர்கள் அனைவரும் கலந்து
கொள்வதுதான் அவர்கள் எங்களுக்குச் செய்யும்
பெரிய உதவியாகும், என்று நான் இந்த நேரத்தில்
தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் சீன
வானொலியின் மற்ற மொழிப்பிரிவின் பிரதி
நிதிகளும் கலந்துகொள்கின்றபொழுது,
மற்றமொழியைக் காட்டிலும் தமிழ் மொழிப்
பிரிவு சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது
என்பதை அவர்களும்
அறிவார்கள்; நாமும் நமது எண்ணத்தை
வெளிப்படுத்தியதாக இருக்கும்.
எனவே நேயர்கள் மற்றும் நேயர்மன்றத்தைச்
சேர்ந்தவர்களும் அவர்களுடைய உறவினர்களுடன்,
நண்பர்களுடன் என்று அனைவரும் தவறாமல்
கலந்துகொண்டு சிறப்பிக்க வேணுமாய் இந்த
வாய்ப்பை பயன்படுத்தி அன்போடு கேட்டுக்
கொள்கிறேன்.

கலை :- அப்புறம் இந்த 2006ம் ஆண்டு

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நேயர், தலை
சிறந்த நேயர்கள் மற்றும் சிறந்த நேயர்
மன்றங்கள் பிரதிநிதிகளும் என்று அனைவரும்
தவறாமல் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள
வேண்டும். அப்படித்தானே?

பரம:- ஆமாம். சிறந்த நேயர்கள், தலை சிறந்த

நேயர்களோடு நமது சாதாரண நேயர்களும் கலந்துகொண்டால்தான் நாம் சீன வானொலி
பிரிவுக்கு காட்டும் ஆதரவாகக் கருத
முடியும். சிறப்பாக சிறப்பிக்க வேண்டும்;
ஏனென்றால் இந்த ஆண்டு ஐம்பெரும் விழா
என்பது சிறப்பு வாய்ந்தது. இந்திய சீன நட்புறவு
ஆண்டை இரண்டு நாட்டு அரசாங்கங்களும்
கொண்டாடிக்கொண்டிருக்கிற வேளையில்
நாமும் கொண்டாடுவது சீன இந்திய நட்பை
மேம்படுத்துவதாக அமையும்.


அதோடு சீன வானொலியின்
65ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கும் நாம் ஆதரவு கொடுத்தாக வேண்டும்.
தமிழ் பிரிவு துவங்கப்பட்டு 43 ஆண்டுகளாக
வெற்றிகரமாக முடித்திருக்கிறது. அதற்கும் நம்
ஆதரவை அளிக்க வேண்டும். இதையும் நாம்
கொண்டாடியாக வேண்டும். அனைத்திந்திய
சீன வானொலியின் தமிழ் நேயர்மன்றம்
1986ம் ஆண்டு இதே ஈரோடு மாவட்டத்தில்தான்
துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட அந்த 20வது ஆண்டு
விழாவைக் கொண்டாட வேண்டிய நிலையில்
சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம். இதேபோல
அனைத்திந்திய சீன வானொலியின் தமிழ்
நேயர்மன்றத்தின் 18வது கருத்தரங்கு சிறப்பாக
நான்கு சீன வானொலிப் பிரதிநிதிகள் கலந்து
கொள்கின்ற சூழ்நிலையில் வெகு சிறப்பாக
நடைபெறவிருக்கிறது. எனவே இதையெல்லாம்
கருத்தில் கொண்டு நம் சீன வானொலி
நேயர்கள் ஒவ்வொருவரும் இதற்கான
முயற்சியைச்ச் தங்களையும் தங்களைச் சார்ந்த
வானொலி நேயர்களையும் அழைத்துக்கொண்டு
வந்து இந்தக் கருத்தரங்கை சிறப்பான முறையில்
நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே நான் மீண்டும் மீண்டும் நம் நமது
அன்பு நேயர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
அந்த அரங்கைப் பொறுத்தவரை 750 பேர்கள்
அமரக்கூடிய மிகப்பெரிய அரங்கு! அந்த அரங்கம்
முழுவதும் நம் நேயர்கள் இருந்தால் நிச்சயமாக
வேறு எந்த மொழிப்பிரிவும் செய்யாத ஒரு

சாதனையை நமது தமிழ் மொழிப்
பிரிவு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு
கிடைத்திருக்கிறது. எனவே நேயர்களே நீங்கள்
மட்டும் வந்தால் போதாது. உங்களைச் சார்ந்த
நமது அனைத்து நேயர்களையும் அழைத்து வர
வேண்டும். அனைவரும் கலந்துகொண்டு இந்த
நிகழ்ச்சியைச் சிறப்பித்தாலே அதுவே நீங்கள்
எங்களுக்கு அளிக்கின்ற மிகப்பெரிய உதவியாக
நாங்கள் கருதுவோம் என்று என் சார்பிலும்
ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர்கள்
மன்றத்தின் சார்பிலும் அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன்.

கலை :- நேயர்களே அனைத்திந்திய சீன வானொலி

தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு
திட்டத்தின் படி ஒருவாரம் தள்ளிப் போடப்பட்ட
விபரங்களைக் கேட்டீர்கள். அதாவது கருத்தரங்கு
நவம்பர் திங்கள் 26ம்தேதி ஈரோட்டில்
நடைபெறவுள்ளது. கருத்தரங்கு பற்றிய விபரங்கள்
அடுத்த வாரம் கேள்வியும் பதில் நிகழ்ச்சியில்
அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன். கேட்கத் தவாறாதீர்கள்.
இத்துடன் கேள்வி பதில் நிகழ்ச்சி
நிறைவு பெறுகிறது.

Thursday, November 02, 2006

<<>>சிறந்த நேயர்மன்றங்கள்-2006<<>>




தி.கலையரசி,
தலைவர்,
தமிழ் பிரிவு,
சீனவானொலி.
கீழ்கண்ட அறிவிப்புக்களை
தி.கலையரசி, அவர்கள்
வானொலியில்
நவம்பர் 1ம் தேதி
புதன்கிழமை
மகிழ்ச்சியோடு அறிவித்தார்.
(வாகைசூடிய‌அனைவருக்கும்
நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்!_ஆல்பர்ட், அமெரிக்கா)
சிறந்த நேயர்மன்றங்கள்



1) நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ சீன‌


வானொலி நேய‌ர்ம‌ன்றம்.



2) ஆரணி சீன வானொலி


நேயர் மன்றம்.



3) திருச்சிராப்பள்ளி மாவட்ட


சீன வானொலி நேயர்மன்றம்.



4) பெரம்பலூர் மாவட்ட‌ சோழன்
சீன வானொலி நேயர்மன்றம்.


இலங்கை காட்டாங்குடி சீன


வானொலி நேயர்மன்றம்


அதன்சிறப்பான செயல்பாட்டுக்காக


"ஊக்கப்பரிசு"


வழங்கிகவுரவப்படுத்தப்படுகிறது.

<<>>தலைசிறந்த நேயர்கள்<<>>

தலைசிறந்த நேயர்கள் பட்டியல்

1) பேளுக்குறிச்சி - செந்தில்.

2) வளவனூர் எஸ்.புதுப்

பாளையம் எஸ்.செல்வம்.


3) தாரவழி பி.முத்து.


4) மணமேடு எம்.தேவராஜா.


5) ஆரணி.பொன்.தங்கவேலன்.

<<>>சிறந்த நேயர்கள் பட்டியல்-2006<<>>

1) விழுப்புரம் -

எஸ்.பாண்டியராஜன்.


2) சேந்தமங்கலம் -

எஸ்.எம்.ரவிச்சந்திரன்.


3) கம்பம் எ.இருதயராஜ்.


4) மஹாராஜபுரம் ஜே.சாரதா.


5) நந்தியாலம் டி.தணிகாலசம்.


6) ஆரணி ஜே.அண்ணாமலை.


7) எஸ்.கே.பாப்பம்பாளையம் -

பி.டி.சுரேஷ் குமார்.



8) மதுரை என்.இராமசாமி.



9) மீனாட்சி பாளையம் கே அருண்.


10) காஜாமலை ஜி.பிரபாகரன்.


11) உத்திரக்குடி -


கலைவாணன் ராதிகா.

12) கண்டமங்கலம் -


ஜே.முஜிபுர் ரகுமான்.

13) கோவை -


தே.நா.மணிகண்டன்.


14) மணக்கால் இரா.அன்பழகன்.


15) அமெரிக்கா - சி.எஸ்.ஆல்பர்ட்

ஃபெர்ணான்டோ.


16) முனுகப்பட்டு பி.கண்ணன் சேகர்.


17) வளவனூர் வ.யு.கல்பனா.


18) காத்தாங்குடி மு.மு.அப்பாஸ்.


19) வளவனூர் முத்து சிவக்குமரன்.


20) பாலூர் பி.எஸ்.சுந்தர்ராஜன்.