Monday, October 15, 2007

<>17வது தேசிய மாநாடு துவங்கியது<>


17th CPC National Congress opens



உல‌க‌மே உன்னிப்பாக சீனாவைக் கண்மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

என்ன காரணம்?
சீனாவில் ந‌டைபெறும் 17வது தேசிய மாநாடுதான் கார‌ண‌ம்!

அந்த‌ அள‌வுக்கு முக்கிய‌த்துவ‌த்தை ஏற்ப‌டுத்தி உல‌க‌த்தின்

க‌வ‌ன‌த்தை ஈர்த்திருக்கிற‌து. எதிர்கால‌த் திட்ட‌ங்க‌ள் என்ன‌
என்று அறிந்துகொள்வ‌திலும், பொருளாதாரத் திட்டமிடுதல்,
வெளிநாட்டு உறவுமுறை போன்றவற்றில் அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலே
காரணம்!

2,200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட
17வது தேசிய மாநாட்டில்,"12 பகுதிகள் அடங்கிய‌
அறிக்கையில்....

"சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச மாபெரும் கொடியை
ஏந்தி, ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக
உருவாக்குவதில் புது வெற்றி காண பாடுபடுவது" என்பது
உட்பட, கடந்த 5 ஆண்டுகால பணியை மீளாய்வு செய்தல்,
கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்துள்ள சீர்திருத்தம்
மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் வரலாற்று முன்னேற்ற போக்கை தொகுத்தல், அறிவியல் வளர்ச்சி கண்ணோட்டத்தின் உள்ளடக்கத்தையும்,
சீன வளர்ச்சிக்கான இதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக்
கூறுதல், சீனப் பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம்,
பாதுகாப்பு, தூதாண்மை, நாட்டின் ஒன்றிணைப்பு, கட்சியின்
கட்டுமானம் முதலிய துறைகளிலான எதிர்கால பணிகளை
ஏற்பாடு செய்தல் ஆகியவை இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.

16வது தேசிய மாநாடு நடைபெற்ற பின், சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் தலைமையில், சீன மக்கள் அனைவரும் பெற்றுள்ள சாதனைகளை அறிக்கையில் ஹூ சிந்தாவ் தொகுத்து அவர் கூறியதாவது:"கடந்த 5 ஆண்டுகாலம், சீர்திருத்தம் மற்றும்
வெளிநாட்டு திறப்புப் பணியிலும், ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்குவதிலும் மாபெரும் முன்னேற்றம் காணப்பட்ட 5 ஆண்டுகாலமாகும். சீனப் பொருளாதார ஆற்றல் பெருமளவில் உயர்ந்துள்ளது.
மக்களின் வாழ்க்கை தெள்ளத்தெளிவாக மேம்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. சமூகக்
காப்பீட்டு முறைமையின் உருவாக்கம் மேலும் வலுப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார முறைமையும், அடிப்படை மருத்துவ சேவையும் மேம்பட்டுள்ளன. கிராமங்களில் இலவச கட்டாயக் கல்வி பன்முகங்களிலும் நனவாகியுள்ளது" என்றார், அவர்.

அறிக்கையில், 2020ஆம் ஆண்டுக்குள் சீன வளர்ச்சியின்
புதிய இலக்குகளை அவர் முன்வைத்தார். நபர்வாரி உள்நாட்டு
உற்பத்தி மதிப்பு, 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட 3 மடங்கு அதிகரிக்க வேண்டும். நகர-கிராம மக்களுக்கு வழங்கப்படும்
சமூக காப்பீட்டு முறைமை அடிப்படையில் உருவாக்கப்பட
வேண்டும். வறுமை அடிப்படையில் ஒழிக்கப்பட வேண்டும்.
அடிப்படை மருத்துவ சேவையை அனைவரும் அனுபவிக்க
வேண்டும். எரியாற்றல் மற்றும் மூலவளத்தின் சிக்கனப்
பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு,
அதிகரிப்பு முறை, நுகர்வு மாதிரி அடிப்படையில்
உருவாக்கப்பட வேண்டும் என்பன பொருளாதாரக் கொள்கை
பற்றி குறிப்பிடுகையில், சீனாவின் நகரங்களுக்கு, கிராமங்களுக்கிடையிலும், பல்வேறு வட்டாரங்களுக்
கிடையிலும் மக்களுக்கு வழங்கப்படும் பொதுச் சேவை
சமமற்ற நிலைமையின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இத்துறையில் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று ஹூ
சிந்தாவ் வலியுறுத்தினார்.

பண்பாட்டு மற்றும் சமூக கட்டுமானம் பற்றி குறிப்பிடும்
போது பொது நலன் தன்மை வாய்ந்த பண்பாட்டு லட்சியத்தை வளர்ப்பதை, மக்களின் அடிப்படை பண்பாட்டு உரிமை மற்றும்
நலனை உத்தரவாதம் செய்வதற்கான முக்கிய வழியாக கொள்வதில் உறுதியாக நின்று, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவின் ஜனநாய அரசியல் பற்றி ஹூ சிந்தாவ் கூறியதாவது:
"மக்கள் ஜனநாயகம், சோஷலிசத்தின் உயிராகும். பல்வேறு நிலையிலும், துறைகளிலும், அரசியல் விவகாரத்தில் பொது
மக்களின் ஒழுங்கான பங்கெடுப்பை விரிவாக்க வேண்டும்.
சோஷலிச ஜனநாயகம் மற்றும் சட்டச் செயல்பாடு, சுதந்திரம்
மற்றும் சமம், நியாயம் மற்றும் நேர்மை என்ற கருத்தை
நிலைநாட்ட வேண்டும்" என்றார், அவர்.தைவான் பிரச்சினை
பற்றி பேசுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,
ஓரே சீனா என்ற கொள்கையின் அடிப்படையில், இரு கரை பகைமையை அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதற்கான கலந்தாய்வு
நடத்தி, அமைதி உடன்படிக்கையை உருவாக்க வேண்டும் என்று
அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தூதாண்மை உறவு பற்றி ஹூ சிந்தாவ் கூறியதாவது:
"அமைதி வளர்ச்சி என்ற பாதையில் சீனா உறுதியாக முன்னேறி, பரஸ்பரம் நலன் அளிக்கும் திறப்பு நெடுநோக்கு திட்டத்தை உறுதியாக கடைப்பிடித்து, தனது நாட்டின் வளர்ச்சியை நனவாக்குவதோடு, இதர நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்" என்றார், அவர்.கட்சி உட்புறத்தில் ஜனநாயக் கட்டுமானத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்களையும் விதிகளையும் மீறும் வழக்குகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக கண்டறிந்து கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments: