Wednesday, December 06, 2006

<<>>இயக்குனர் வாழ்த்துரை<<>>





சீன வானொலி
இயக்குனர் வாழ்த்துரை...!

2006年台长大会贺词

கருத்தரங்கிற்கான இதயப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்...!

-- வுகாங் கன் நியன் 8-11-06
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர்
மன்றத்தின் 18வது கருத்தரங்கு நடைபெறும்
வேளையில் என் சார்பிலும் சீன வானொலி
நிலையத்தின் அனைத்து பணியாளர்களின்
சார்பிலும் கருத்தரங்கு வெற்றிகரமாக
நடைபெறுவதற்கு நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாண்டு சீன-இந்திய நட்புறவு ஆண்டாகும்.
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஆயிரம்
ஆண்டுகளுக்கு அதிகமான நட்பு வரலாறு
நிலவுகிறது. பண்டைக் காலம் தொட்டு புத்த
மத பண்பாட்டால் இந்த இருநாடுகளும்
நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

சீன புத்த மதத் துறவி சியான்ச்சான் இந்தியாவில்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்து புத்த மதத்தை
ஆராய்ந்தார். இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகமும்
இரு நாட்டுறவின் வளர்ச்சி வரலாற்றில் முக்கிய
அத்தியாயமாக திகழ்கின்றது.

சீன-இந்திய நட்புறவு ஆண்டான இவ்வாண்டில்
இந்தியாவில் பணி பயணம் செய்வதற்காக சீன
வானொலி பிரதிநிதி குழு இந்தியாவுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.

இரு நாட்டுறவை வளர்ப்பதற்கு பங்கு ஆற்றும்
வகையில் தமிழ்ப் பிரிவு சீன-இந்திய நட்புறவு
ஆண்டு என்னும் கட்டுரை போட்டி ஏற்பாடு செய்தது.

இதில் 200க்கும் அதிகமான நண்பர்கள்
பங்கெடுத்தனர். அத்துடன் சிறந்த கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கட்டுரைகள் வானொலி
மூலம் ஒலிபரப்பட்டன என்பதை நான் கேட்டறிந்து
மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இங்கே நண்பர்களுக்கு நன்றியையும்
பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நண்பர்களாகிய உங்களின் முயற்சியினால்
தமிழ்ப் பிரிவுக்கு வந்து சேர்ந்த கடித எண்ணிக்கை
சீன வானொலியில் நேயர் பணியின் முன்
வரிசையில் உள்ளது. இங்கே நான் வானொலித்
தலைவர்களின் சார்பில் உங்களுக்கு நன்றி
தெரிவிக்கின்றேன்.

நடப்புக் கருத்தரங்கில் என்னால் கலந்து
கொள்ள முடியாதது எனக்கு வருத்தம் தான்.
ஆனால் ஈரோடு தமிழ் நேயர் மன்றத்தின்
உதவியுடன் தலைமை செயலர் பல்லவி
கே பரவிபரமசிவன் உள்ளிட்ட பொறுப்பாளர்களின்
உளமார்ந்த முயற்சியுடன் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதை கண்டு இதயப்பூர்வமான மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற
வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகின்றேன்.
சீன-இந்திய நட்பு நீடுழி வாழ்க!

தமிழ் நேயர் மன்றப் பணி பொங்கி வளர்க!!

உங்கள் வாழ்க்கை தேன் போல இனிமையாக
அமைக!!!

நன்றி!
வணக்கம்
வுவான் கன் நியன்
சீன வானொலி இயக்குனர்.






*********************************************************





<>ஐம்பெரும்விழா சிறப்பு வாழ்த்துரை...!<>






-ஆல்பர்ட் பெர்னாண்டோ,


தலைவர்,


சீன தமிழ் வானொலி நேயர்மன்றம்,


அமெரிக்கா.





நெஞ்சம் இனிக்கும் இந்த ஐம்பெரும்விழாவிற்கு


வருகைதந்துள்ள சீன வானொலி பிரதிநிதிகள்


நால்வரையும் என் சார்பிலும் அமெரிக்க


நேயர்மன்றத்தின் சார்பிலும் இருகரம் கூப்பி


வருக, வெல்க, வாழ்கஎன வாழ்த்திடுவதில்


மகிழ்வெய்துகிறேன்.





என்னுடல் மட்டும் அமெரிக்காவில்!


என்னுள்ளமெலாம் இந்தக் கஸ்தூரிபா


கலையரங்கில்தான்!





இந்திய - சீன நட்புறவு ஆண்டுவிழா...


நமதுசீன வானொலி பிரதிநிதிகள் திட்டமிட்டபடி


இங்கே வருவதில் சிறுதடை விசா பெறுவதில்


இருந்தும், "அருவினை யென்ப வுளவோகருவியாற்


காலமறிந்து செயின்" என்ற வள்ளுவப் பெருந்தகையின்


"What is impossible for right means at the RIGHT TIME"


என்பதற்கொப்ப தடைகளைத் தகர்த்து


இங்குவந்திருக்கிறார்கள், நம்தமிழ் பிரிவு தலைவர்


கலையரசி அம்மையார்அவர்களும் மற்ற பிரதிநிதிகளும்!





சீனாவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவை..நட்பை ஆண்டுவிழாவாகக் கொண்டாடுகிறோம்.


சீன- இந்திய நட்பு இன்று நேற்று ஏற்பட்டதுஅல்ல;


சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்பாகபண்டைக்கால


சீனாவின் புகழ்பெற்ற பண்பாட்டுத்தூதர் துறவி


யுவான் சுவாங் காலத்தில் முகிழ்த்தது!





கி.பி627ல் யுவான் சுவாங்க் இந்தியாவில் அப்போது


புகழ்பெற்று விளங்கிய நாளந்தா பலகலைக்கழகத்தில்


கல்வி பயில தமது 27ம் வயதில் கால்நடையாக....


பொடிநடையாக காடுமேடு வனாந்திரங்களைக்கடந்து


அன்றைய சீனாவின் சாங் ஆனிலிருந்துஅதாவது


இன்றைய மத்திய சீனாவின்"சீ ஆன்" நகரிலிருந்து


மனித நடமாட்டமில்லாத பாலைவனங்களையெல்லாம்


கடந்து பல்விதஇன்னல்களைக் கடந்து கி.பி.629ம் ஆண்டு வடஇந்தியாவிற்கு வந்தார்.


(அப்படிப்பட்ட சிரமங்கள் ஏதும் இன்றி இன்றைக்குநமது சீன வானொலிப் பிரதிநிதிகள் இங்குவந்துள்ளனர். )





நாளந்தா பல்கலைக்கழகத்தில் தம் வண்ணக்


கனவுகளுக்கு உயிர் கொடுத்தார் சுவாங்!


எண்ணிவந்ததைவிட நம் பண்பாடும்


விருந்தோம்பலும் அவரைப் பல்லாண்டுகள்


தங்கவைத்த நட்புறவுப் பூமி இது!





அவர் எழுதிய நூல்களே இதற்குச் சான்று.


பாஹியான் போன்ற யாத்ரிகர்களும் தங்கள்


எழுதிய வரலாற்றுக்குறிப்புகள் நமது சீன-இந்திய


நட்பை விரிவாக எடுத்து இயம்புகிறது.





சீன தேசத்தில் புகழ்பெற்ற நாவல்,"மேற்கிற்கு


சுற்றுலா"இந்த நாவலின் கதாநாயகன்


"தாங் சான் ச்சாங்"என்ற பாத்திரம்


சீன-இந்தியா நட்பை விலாவாரியாய் விவரிக்கிறது!





அப்போது முகிழ்த்த உறவில் இடையில் சிறுவிரிசல்


கண்டாலும் கடல் வாணிகத்தின் மூலம் இருநாட்டு


உறவுகளுக்கும் அப்போதே சிறகு முளைத்ததை


எவராலும் மறுத்துவிடமுடியாது!





இரண்டு தேசங்களும் மிகப்பழைய பாரம்பரியங்களுக்குச் சொந்தமானவை!


இரண்டு வேறுபட்ட நாகரிகங்களிலிருந்து கிளைத்தவை!


இரு தேசங்களுமே கிராமப்புறங்களும் விவசாயிகளையும் மிகுதியாகக் கொண்டவை!


அதிவேக நவீனத் தொழில்நுட்பத்தோடும், தொழிலும் வணிகமும் புரிபவை!


பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்பவை!


ஒருசேர முன்னிலை வகிப்பது உலகின் அதிக மக்கள்


தொகையில்!பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய சீன வணிக மதிப்புரூ.500 கோடி! இதுவே 2005ல் ரூ.8,500 கோடி!


நடப்புஆண்டில் இதுவே ரூ.90ஆயிரம் கோடியாகும்


என மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2010ல் இதன் இலக்குரூ.2.25


இலட்சம் கோடியென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





இதனால்தான் இருதேசங்களும் நட்பை வளர்த்து


தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டியது அத்தியா


வசியம்என்று கருதியதால்தான் சீனத்தலைவர்


ஹ¥ சிந்தாவ்இந்தியா வந்ததும்,"கையோடு கை சேர்த்து ஒத்துழைப்பை விரிவாக்கி, அருமையான எதிர்காலத்தை


கூட்டாக உருவாக்குவது" என்ற அவரது சொற்பொழிவு!





சீன-இந்திய நட்புறவு, இரு தரப்புகளுக்குச் சாதகமானது!





ஆசியாவிற்கும் உலகிற்கும் நன்மை பயக்கும்; சீன-இந்திய


உறவு இருதரப்பு வரம்பைத் தாண்டி, உலக முக்கியத்துவம்


வாய்ந்தது என்ற அவரது உரை அவரது மனவெளிப்பாடு


மட்டுமல்ல; இரு தேசத்தின் நட்புறவில் மலர்ந்த காலத்தின்


தேவை கருதிய சத்தியமான வார்த்தைகள் என்பதில் எள் முனையளவும் அய்யமில்லை!





இருதேசங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பரஸ்பர


நம்பிக்கையின் அடையாளமாக


சிக்கிம் மாநிலத்தினையும் சீனாவின் திபெத் சுயாட்சிப்


பகுதியையும் இணைக்கும் நாதுல்லா கணவாய் கடந்த


44 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலைத் திங்கள் 6ம்


நாள் திறக்கப்பட்டதில் இந்த உறவுக்கு புதியபாலம்


உதயமாகியுள்ளது தொடரும் என்ற பேருவகையை நமக்கு அளிக்கிறது.





சீன-இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய தருணமிது என்றால்


அது மிகையில்லை.சீன வானொலியின் 65ம்


ஆண்டுவிழா!





பீகிங் வானொலியாய் உதயமாகி BE-KING போலஉலக வானொலிகளின் அரசனாக வீர நடைபோட்டு 40க்கும்


மேற்பட்ட அந்நிய மொழிகளில்அட்டகாசமாய் உலகை வலம்வருகிறது! உலக நேயர்களிடமிருந்து வரும் நேயர் கடிதங்களின்எண்ணிக்கை உலகின் வேறு எந்த


வானொலிக்கும்வராத மிக அதிக அளவில் வந்து


குவிகின்றது.இதுவே அதன் பலம்!





அதன் வெற்றி!சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில்


இது ஒரு சரித்திரச் சாதனை மைல் கல்!சீன வானொலி துவக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப்பின் தமிழ் பிரிவு


துவக்கப்பட்டு 43 விழுதுகள்விட்டு பழுதுகள் இல்லாமல்


பணி தொடர்ந்துஇன்றைக்கு சீன வானொலி தமிழ் பிரிவு


தலைவர் திருமதி.கலையரசி அம்மையாரயும் மற்ற


மொழிப் பிரதிநிதிகளையும் தமிழகம் நோக்கி எத்தனை


தடை வந்தாலும் அதையும் தாண்டி தமிழ்நேயர்களைச்


சந்திப்போம் என்று ஈங்குவந்துள்ளதே இதன் வெற்றியை பறைசாற்றுகிறது என்பது அப்பழுக்கற்ற உண்மை!





தமிழகத்தில் நானறிந்தவரை நடிகநடிகையர்களுக்கு


ரசிகர்மன்றங்கள் இருக்கிறது. நற்பணிமன்றங்கள்


இருக்கின்றன. ஆனால் வானொலிக்காக நேயர்கள்


இருக்கலாம்; மன்றங்கள் இருக்கிறதா என்றால்நிச்சயமாக


இல்லை என்றே சொல்லலாம்.வானொலியின் விவசாய நிகழ்ச்சிக்காகமட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக


முகம் காட்டிக்கொண்டிருக்கிற சூழலில் அகில இந்திய சீன வானொலியின் தமிழ் நேயர்மன்றங்கள் தமிழகமாவட்டங்கள்





தோறும் ஏற்படுத்தப்பட்டிருப்பதுசீன வானொலி மட்டுமே என்றுஅறுதியிட்டுஉறுதியாகச் சொல்ல முடியும்!


இதற்கு காரணம் அ.இ.சீன வானொலி தலைமைமன்றத் தலைவர்வளவனூர் திரு.செல்வம் மற்றும்அதன் நிர்வாகிகள்


மற்றும் நேயர்மன்ற தலைவர் பொறுப்பாளர்களையே


சாரும்!





இவர்களின்தூண்டுதலால் ஆர்வமாய் சீன வானொலியைச்செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துநேயர்மன்றங்கள் உருவாகி உற்சாகநடை


போடுகின்றன.





இப்படிப்பட்ட தன்னார்வலர்களால் உருவாகியநேசமிகு நேயர்மன்றங்களை ஒருங்கிணைத்து ஓரமைப்பாக..


பேரமைப்பாக ஏற்படுத்தி அகிலஇந்திய சீனவானொலி


நேயர்மன்றம் துவங்கித் தொய்வின்றி தொடர்ந்து துள்ளல் நடைபோட்டு20 நிதர்சன ஆண்டுகளைக் கடந்து


வாலிபமுறுக்கோடு திகழ்வதைக் கொண்டாடுகிறோம்.





இதன் மூலவராய் உற்சவமூர்த்தியாய்த் திகழும்வளவனூர்


செல்வம் அவர்களுக்கு இந்தநேரத்தில்பலத்த கரவொலி எழுப்பி அவருக்கு உற்சாகம் ஊட்டுவோம்!





அ.இ.சீன.வானொலி நேயர்கள் மன்ற 18வது கருத்தரங்கு! உற்சாகப் பெருவெள்ளமாய் இதோ!





இந்தக் கருத்தரங்கம் என்பது தேனூறும் நிகழ்வன்றோ!


இங்கு அமர்ந்திருக்கின்ற ஒவ்வொரு நேயரும்மத்தாப்பூவாய்


மலர்ந்து சிரிக்கும் முகங்களோடு!சீன வானொலித் தமிழ் பிரிவுத்தலைவர் நம் பாசமும்நேசமும் நிறைந்த திருமதி


கலையரசி என்ற ஜு ஜுவான் குவா மற்றும் சீன வானொலி தென்ஆசிய மொழிப்பிரிவு துணைத்தலைவர் திரு.சுன்ஜியான் ஹி, நேபாள பிரிவு தலைவர் திருமதி.ஜங் யு,சிங்கள மொழிப்பிரிவு துணைத்தலைவர் செங் லிஆகியோர் நம் விருந்தினர் என்று அவர்களை வரவேற்று உபசரிக்கும் உத்வேகத்தோடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் இக் கருத்தரங்கில் வீற்றிருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனதினிய அன்பு மலர்த்தூவல்கள்!





இந்த ஐம்பெரும் விழா இங்கே அமைந்திட இரவு பகல்


பாராது உழைத்து கண்களில் மின்னும் களைப்பையும்


சோர்வையும் மீறி இதழ்கடை முறுவலோடு பம்பரமாய்ச் சுறுசுறுப்போடு சுழலும் பல்லவி.கே.பரமசிவன்


அவர்களுக்கான என் அடிமனத்து வாழ்த்துக்களோடு


எழுப்புங்கள் உங்கள் கரவொலிதனை!





அடுத்த கருத்தரங்கத்திற்கு முன்பாக நேயர்மன்றம்


இல்லாத மாவட்டங்களில் அருகிலுள்ள மாவட்டத்தைச்


சேர்ந்த நேயர்மன்றம் பொறுப்பெடுத்து நேயர்மன்றத்தை உருவாக்கவும், நேயர்மன்றம் இல்லாத மாவட்டமே


இல்லையென்ற நிலை உருவாக்கிடவும் முன்வரவேண்டும்


என்ற வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிற அதே வேளை,


நான் முன்னமேஅளித்த வாக்குறுதியின்படி ஒவ்வொரு நேயர்மன்றத்துக்கும் ஒவ்வொரு இணையப்பக்கத்தைஉருவாக்கித் தருவேன் என்ற மகிழ்ச்சியானசெய்தியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.





இதன் மூலம் உங்கள் கருத்துக்கள் சீன வானொலியை


உடனுக்குடன் எட்டும் வகையில் இருக்கும்!





மீண்டும் இந்த ஐம்பெரும் விழா வெற்றிபெறவும்


இதற்கு மூல காரணமாய் இருக்கும் உங்கள்


அனைவருக்கும் என்னினிய வாழ்த்துக்கள்.


நன்றி.


(ச்சியே..ச்சியே)


வணக்கம்!


ஆல்பர்ட் பெர்னாண்டோ,
தலைவர்,
சீன தமிழ் வானொலி நேயர்மன்றம்,
அமெரிக்கா.

No comments: