Thursday, November 09, 2006

<<>>ஈரோடு கருத்தரங்க தேதி மாற்றம்<<>>

கடந்த நவம்பர் 8-11-06 புதன்கிழமை
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில்
சீன வானொலி தமிழ் பிரிவின்
தலைவர் திருமதி.தி.கலையரசி அவர்களும்
பெருந்துறை பல்லவி பரமசிவன் அவர்களும்
நிகழ்த்திய உரையாடலை இங்கு
சீன வானொலி - தமிழ் நேயர்களுக்காக
மீண்டும் எழுத்துவடிவில் தருகிறேன்.
-ஆல்பர்ட், அமெரிக்கா.















கலையரசி :- வணக்கம் நேயர்களே! இன்றைய

கேள்வியும் பதில் நிகழ்ச்சியில் முக்கியமாக

பெருந்துறை கே. பல்லவி பரமசிவன் மற்றும்

கலையரசி ஆகிய நானும் அனைத்திந்திய சீன

வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது

கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற வேண்டும்

என்று திட்டமிடப்பட்டுள்ளது. அது பற்றிய

விபரம் நாங்கள் இருவரும் நேயர்களுக்கு

அறிமுகப்படுத்துவோம்..முதலில்

வணக்கம் பரமசிவம்!



பரமசிவம் :- வணக்கம். திருமதி கலையரசி

அம்மையார் அவர்களே!

கலை :- கடந்த வாரம் கேள்வி பதில்


நிகழ்ச்சியில் அனைத்திந்திய சீன

வானொலி நேயர் மன்ற கருத்தரங்கம்

நடத்துவது பற்றி நேயர்களுக்கு

அறிமுகப்படுத்தினோம். அப்படித்தானே!

பரம :- ஆமாம்.


கலை :-
இப்ப சூழ்நிலை அங்கு கஷ்ட்டம்.

விசா பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது.

அதனால் திட்டமிட்டபடி சென்னைக்கு

16ம் தேதி வரமுடியாமல்
தள்ளிப்போடப்பட்டுள்ளது.

பரம :- மாற்றப்பட்டுள்ளது.

கலை:-
ஆமாங்க.. ஆகவே கருத்தரங்கம்
ஒருவாரம் தள்ளிப்போடவேண்டும்.

பரம:- நாம் ஏற்கனவே விவாதித்தபடி,

ஒருவார காலம் கருத்தரங்கம் தள்ளி

வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம்தேதியன்று

ஈரோடு மாவட்டம் திண்டல் மலை வேளாளர்

மகளிர் கல்லூரியில் கஸ்தூரிபா கலையரங்கில்

அனைத்திந்திய சீன வானொலியின் தமிழ்

நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு

நடைபெற இருக்கிறது.

உங்கள் பயணதிட்டம் திட்டமிட்டபடி இல்லாத

காரணத்தால், ஒருவார காலம் தள்ளி நவம்பர்

திங்கள் 26ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை


9மணிக்கு நடைபெறவிருக்கிறது.

மீண்டும் கூறிக்கொள்வது, வருகின்ற 26ம்தேதி

காலை 9மணிக்கு அனைத்திந்திய

சீன வானொலியின்

கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் திண்டல்

மலை, வேளாளர் மகளிர் கல்லூரியில்

கஸ்தூரிபா கலையரங்கில் ஐம்பெருவிழாவாக,

அதாவது,

இந்திய சீன நட்புறவு ஆண்டுவிழா!


சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!


சீன வானொலி தமிழ் பிரிவின் 43ம்

ஆண்டுவிழா!


அனைத்திந்திய சீன வானொலி

தமிழ் நேயர்மன்றத்தின்

20வது ஆண்டுவிழா!



அனைத்திந்திய சீன வானொலி

தமிழ் நேயர்மன்றத்தின் 18வது

கருத்தரங்கு விழா!

என்று ஐம்பெரும்விழாவாக மிகச் சிறப்பாக

நடைபெற இருக்கிறது. நமது சீன வானொலியின்

தமிழ்பிரிவு தலைவர் திருமதி கலையரசி அம்மையார்

உள்ளிட்ட சீன வானொலி பிரதிநிதிகள் நான்குபேர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

இவர்களோடு ஈரோடு மாவட்ட முக்கிய
பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க
இருக்கிறார்கள். எனவே நம் சீன வானொலியின்
அனைத்து நேயர்களும் தவறாமல் இந்த ஐபெரும்
விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்
என்று இந்தவாய்ப்பை பயன்படுத்தி அன்போடு
நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கலை:- பரமசிவம்..இதுவரை கருத்தரங்கம்

நடத்த ஆயத்தமாக இருக்கிறீர்களா?

பரம :- கிட்டத்தட்ட பெரும்பகுதி பணிகளை

நிறைவு செய்து இருக்கிறோம். நான் ஏற்கனவே
கேள்வி பதில் நிகழ்ச்சியில் அறிவித்தபடி சிறப்பு
மலர் பணிகள் 90 சதம் நிறைவடைந்துள்ளது. விழா
அழைப்பிதழ்கள் தங்கள் ஒப்புதலுக்காகக்
காத்திருந்தது.


இன்னும் ஒரு சில நாட்களில் அழைப்பிதழ்
அச்சடிக்கப்பட்டு அனைத்து சீன வானொலியின்
அந்தந்த மாவட்ட நேயர் மன்றங்களுக்கும்
பொறுப்பாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுவிடும்.
ஏற்கனவே அறிவித்தபடி உங்களை வரவேற்க சீன
வானொலி நேயர்களும் நேயர்மன்ற பொறுப்பாளர்களும்
தயாராக காத்திருக்கிறோம். இந்த ஐம்பெரும் விழா மிகவும்
சிறப்பான முறையில் நடைபெறவிருக்கிறது என்ற
மகிழ்ச்சியான செய்தியை மீண்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலை :-
அப்படியிருந்தால், நேயர்களுக்கான் அறிவிப்பு
தேதியை நம் சீன வானொலி தமிழ் மன்ற நேயர்களுக்கு அறிவிக்க வேண்டும் அல்லவா?

பரம :- ஆம். ஏற்கனவே கருத்தரங்கம்

ந‌டைபெறும் அழைப்பின் மாதிரியை தங்களுக்கு
அனுப்பி சீன வானொலி மூலம் நேயர்களுக்கு
அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டிருந்தோம்.
இப்போது தேதி மாற்றப்பட்டுள்ளதால் தேதியை
நவம்பர்மாதம் 26ம்தேதி ஞாயிற்றுக்கிழமை
என்று மாற்றி நீங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.


கலை :- ஆம்! பரமசிவம் கருத்தரங்கம் பற்றி

கொஞ்சம் நேயர்களுக்கு சொல்லுங்களேன் ?

பரம:- இந்தக் கருத்தரங்கத்தைப் பொறுத்தவரை
சிறப்பாக நாங்கள் கருதுகின்றோம்.
காரணம்,
இந்திய-
சீன நட்புறவு ஆண்டுவிழா!

சீன வானொலியின் 65ம் ஆண்டுவிழா!
சீன வானொலி தமிழ் பிரிவின் 43ம் ஆண்டுவிழா!
அனைத்திந்திய சீன வானொலி நேயர்மன்றத்தின்
20வது ஆண்டுவிழா!
அனைத்திந்திய சீன வானொலி நேயர்மன்றத்தின்
18வது கருத்தரங்கு விழா!
என்று ஐம்பெரும்விழாக்கள்
ஈரோடு மாவட்டம் திண்டல் மலை
வேளாளர் மகளிர் கல்லூரியில் கஸ்தூரிபா
கலையரங்கில் காலை
9மணி முதல் மாலை 4.30 மணி
வரை சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்தக் கருத்தரங்கில் சீன வானொலியின்
பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பது
இந்தக் கருத்தரங்கிற்கு இன்னும்
மெருகூட்டுவதாய் அமையும்.


இந்த அடிப்படையில் நேயர்கள் எங்களுக்கு
முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம். காரணம் என்ன
வென்றால் இந்தக் கருத்தரங்கம் சிறப்பாக
அமையவேண்டும் என்றால் அதற்கு முக்கியப்
பொறுப்பு அனைத்து சீன வானொலி நேயர்களும்
நேயர்மன்ற பொறுப்பாளர்களும் ஆவார்கள்.
நீங்கள்அளிக்கும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு
உண்டு என்பதில் எந்த அய்யமும் இல்லை.

கலை :- ஆம். நீங்கள் முன்பு சொன்னது

மாதிரி 5 பிரம்மாண்டமான விழாக்களை
ஒரே மேடையில் கருத்தரங்கில் நடை
பெறவேண்டும் என்று சொன்னீர்கள். இதற்கு
நேயர்கள் எந்த மாதிரியான உதவி அளிக்க
வேண்டும் என்றால் நேயர்மன்ற நேயர்கள்
அனைவரும் கருத்தரங்கில் கலந்துகொண்டு
சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் முதல் உதவி!
அப்படித்தானே?


பரம:- ஆமாம். நேயர்கள் நேயர்மன்றங்களிடமிருந்து

வேறு எந்த உதவியும் நாங்கள் எதிர்பார்க்க
வில்லை; நேயர்கள் அனைவரும் கலந்து
கொள்வதுதான் அவர்கள் எங்களுக்குச் செய்யும்
பெரிய உதவியாகும், என்று நான் இந்த நேரத்தில்
தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் சீன
வானொலியின் மற்ற மொழிப்பிரிவின் பிரதி
நிதிகளும் கலந்துகொள்கின்றபொழுது,
மற்றமொழியைக் காட்டிலும் தமிழ் மொழிப்
பிரிவு சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது
என்பதை அவர்களும்
அறிவார்கள்; நாமும் நமது எண்ணத்தை
வெளிப்படுத்தியதாக இருக்கும்.
எனவே நேயர்கள் மற்றும் நேயர்மன்றத்தைச்
சேர்ந்தவர்களும் அவர்களுடைய உறவினர்களுடன்,
நண்பர்களுடன் என்று அனைவரும் தவறாமல்
கலந்துகொண்டு சிறப்பிக்க வேணுமாய் இந்த
வாய்ப்பை பயன்படுத்தி அன்போடு கேட்டுக்
கொள்கிறேன்.

கலை :- அப்புறம் இந்த 2006ம் ஆண்டு

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நேயர், தலை
சிறந்த நேயர்கள் மற்றும் சிறந்த நேயர்
மன்றங்கள் பிரதிநிதிகளும் என்று அனைவரும்
தவறாமல் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள
வேண்டும். அப்படித்தானே?

பரம:- ஆமாம். சிறந்த நேயர்கள், தலை சிறந்த

நேயர்களோடு நமது சாதாரண நேயர்களும் கலந்துகொண்டால்தான் நாம் சீன வானொலி
பிரிவுக்கு காட்டும் ஆதரவாகக் கருத
முடியும். சிறப்பாக சிறப்பிக்க வேண்டும்;
ஏனென்றால் இந்த ஆண்டு ஐம்பெரும் விழா
என்பது சிறப்பு வாய்ந்தது. இந்திய சீன நட்புறவு
ஆண்டை இரண்டு நாட்டு அரசாங்கங்களும்
கொண்டாடிக்கொண்டிருக்கிற வேளையில்
நாமும் கொண்டாடுவது சீன இந்திய நட்பை
மேம்படுத்துவதாக அமையும்.


அதோடு சீன வானொலியின்
65ம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்கும் நாம் ஆதரவு கொடுத்தாக வேண்டும்.
தமிழ் பிரிவு துவங்கப்பட்டு 43 ஆண்டுகளாக
வெற்றிகரமாக முடித்திருக்கிறது. அதற்கும் நம்
ஆதரவை அளிக்க வேண்டும். இதையும் நாம்
கொண்டாடியாக வேண்டும். அனைத்திந்திய
சீன வானொலியின் தமிழ் நேயர்மன்றம்
1986ம் ஆண்டு இதே ஈரோடு மாவட்டத்தில்தான்
துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட அந்த 20வது ஆண்டு
விழாவைக் கொண்டாட வேண்டிய நிலையில்
சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம். இதேபோல
அனைத்திந்திய சீன வானொலியின் தமிழ்
நேயர்மன்றத்தின் 18வது கருத்தரங்கு சிறப்பாக
நான்கு சீன வானொலிப் பிரதிநிதிகள் கலந்து
கொள்கின்ற சூழ்நிலையில் வெகு சிறப்பாக
நடைபெறவிருக்கிறது. எனவே இதையெல்லாம்
கருத்தில் கொண்டு நம் சீன வானொலி
நேயர்கள் ஒவ்வொருவரும் இதற்கான
முயற்சியைச்ச் தங்களையும் தங்களைச் சார்ந்த
வானொலி நேயர்களையும் அழைத்துக்கொண்டு
வந்து இந்தக் கருத்தரங்கை சிறப்பான முறையில்
நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே நான் மீண்டும் மீண்டும் நம் நமது
அன்பு நேயர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
அந்த அரங்கைப் பொறுத்தவரை 750 பேர்கள்
அமரக்கூடிய மிகப்பெரிய அரங்கு! அந்த அரங்கம்
முழுவதும் நம் நேயர்கள் இருந்தால் நிச்சயமாக
வேறு எந்த மொழிப்பிரிவும் செய்யாத ஒரு

சாதனையை நமது தமிழ் மொழிப்
பிரிவு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு
கிடைத்திருக்கிறது. எனவே நேயர்களே நீங்கள்
மட்டும் வந்தால் போதாது. உங்களைச் சார்ந்த
நமது அனைத்து நேயர்களையும் அழைத்து வர
வேண்டும். அனைவரும் கலந்துகொண்டு இந்த
நிகழ்ச்சியைச் சிறப்பித்தாலே அதுவே நீங்கள்
எங்களுக்கு அளிக்கின்ற மிகப்பெரிய உதவியாக
நாங்கள் கருதுவோம் என்று என் சார்பிலும்
ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர்கள்
மன்றத்தின் சார்பிலும் அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன்.

கலை :- நேயர்களே அனைத்திந்திய சீன வானொலி

தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு
திட்டத்தின் படி ஒருவாரம் தள்ளிப் போடப்பட்ட
விபரங்களைக் கேட்டீர்கள். அதாவது கருத்தரங்கு
நவம்பர் திங்கள் 26ம்தேதி ஈரோட்டில்
நடைபெறவுள்ளது. கருத்தரங்கு பற்றிய விபரங்கள்
அடுத்த வாரம் கேள்வியும் பதில் நிகழ்ச்சியில்
அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன். கேட்கத் தவாறாதீர்கள்.
இத்துடன் கேள்வி பதில் நிகழ்ச்சி
நிறைவு பெறுகிறது.

No comments: