
தமிழ் பிரிவின்
தலைவர் வாழ்த்துரை....!
2006年听众代表大会贺词
மதிப்புக்குரிய பெரியோர்களே,
அன்புமிக்க நண்பர்களே வணக்கம்.
அனைத்திந்திய சீன வானொலி தமிழ்
நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு
வெற்றிகரமாக நடைபெறுவதற்கு
நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கருத்தரங்கில் விருந்தினராக அழைக்கப்பட்டு
சிறப்புடன் கலந்து கொண்டுள்ள பெரியோர்கள்
அனைவருக்கும் நேயர்களின் சார்பிலும்
தமிழ்ப் பிரிவின் அனைத்து பணியாளர்களின்
சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாண்டு சீன இந்திய நட்புறவு ஆண்டாகும்.
இரு நாட்டு உயர் நிலை பரிமாற்றம் இவ்வாண்டு அதிகரித்துள்ளது. எங்கள் அரசுத் தலைவர்
ஹுச்சிந்தாவ் இந்தியாவில் பயணம் செய்தார்.
இந்திய உயர் அதிகாரிகளும் இவ்வாண்டில்
சீனாவில் பயணம் செய்துள்ளனர்.
இந்த நட்பார்ந்த சூழ்நிலையில் நமது நேயர்
மன்றத்தின் 18வது கருத்தரங்கு நடைபெறுகின்றது. இதற்கிடையில் சீன வானொலி நிறுவப்பட்ட
65வது ஆண்டு நிறைவு விழா, அனைத்திந்திய
சீன வானொலி தமிழ் நேயர் மன்றம்
உருவாக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு விழா,
தமிழ் ஒலிபரப்பின் 43வது ஆண்டு நிறைவு விழா
ஆகிய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2004ம் ஆண்டு ஜுலைத் திங்கள் முதல் தமிழ்
ஒலிபரப்பின் கட்டமைப்பு அரை மணியிலிருந்து
ஒரு மணி நேரமாகி தற்போது இரண்டு
ஆண்டுகளாகிவிட்டது. கடந்த இரண்டு
ஆண்டுகளில் குறிப்பாக கடந்த ஓராண்டில்
ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளின் தரம் உயர்ந்துள்ளது.
இந்த முன்னேற்றத்தின் சிறப்பு இந்தியாவிலிருந்து
சீனாவுக்கு வந்து தமிழ்ப் பிரிவில் நிபுணராக வேலை
செய்த திரு ராஜாராம், திரு கிளிடஸ் ஆகியோரைச்
சாரும். அவர்களின் உதவியுடனும் ஆதரவுடனும்
எங்கள் நிகழ்ச்சிகளின் அம்சங்களும் தரமும்
உயர்ந்துள்ளன.
குறிப்பாக நட்பு பாலம் நிகழ்ச்சி மூலம் பெய்சிங்கில் பணிபுரிகின்ற தமிழர்களின் குரல் உங்களால் கேட்க
முடிகின்றது. சீன பண்பாடு சீன உணவு அரங்கம்,
நலவாழ்வு பாதுகாப்பு, சீனாவில் இன்ப பயணம்
முதலிய நிகழ்ச்சிகள் நேயர்களால் மிகவும்
வரவேற்கப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.
தமிழ்பிரிவின் இணைய தளத்தின் வளர்ச்சியிலும்
மாபெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இப்போது இணையத்தின் மூலம் சீன இசை பாடல்கள் செய்தித் தொகுப்புகள் ஆகியவற்றை படிப்பதோடு ஒலி வடிவத்தில் கேட்கவும் முடியும். பல்வகை நிழற்படங்களுடன் கூடிய கட்டுரைகளும், செய்திகளும் தினந்தோறும் சீனாவின் வளர்ச்சியை அறிவிக்கின்றன.
தமிழ்ப் பிரிவில் பணியாளர்கள் குறைவாக
இருந்த நிலையிலும் நேயர்களிடமிருந்து கிடைத்த கடிதங்களையும் நேயர் பணியுடன் தொடர்புடைய வேலையையும் கையாள்வதற்கு சிறப்புப் பணியாளர்
ஒருவரை ஒதுக்கியுள்ளோம்.
திங்களுக்கு 41 ஆயிரத்து 300 கடிதங்களை
கையாண்டால்தான் வானொலி விதித்த கடித
கடமையை நிறைவேற்ற முடியும்.
ஆகவே நேயர் பணிக்கென ஒருவர் மட்டும்
இருக்கின்ற நிலையில் நேயர்களுக்கு சேவை
புரிவதில் குறை நிலவுவது திண்ணம்.
எடுத்துக்காட்டாக தாமதமாக பதில் கடிதம்
அளிப்பது, கடிதம் எழுதிய ஒவ்வொரு நேயருக்கும்
பதில் எழுதாமல் இருப்பது போன்ற குறைகள்
நிலவுகின்றன.
ஆகவே இந்த குறைகளுக்காக இங்கே உங்களிடமிருந்து மன்னிப்பு கேட்கின்றேன்.
எதிர்காலத்தில் சீன வானொலி நிலையத்தின்
எதிர்காலத்தில் சீன வானொலி நிலையத்தின்
தமிழ்பிரிவின் ஒலிபரப்புப் பணி கண்டிப்பாக வளரும்.
தமிழ் படிப்பை முடித்து கொண்டு பட்டம் பெற்ற
மாணவர்கள் தமிழ்ப் பிரிவின் பணியில் சேர்ந்த
பின் எமது தமிழ்ப் பிரிவின் பணித் தரம்
மேம்படுத்தப்படும். அப்போது பல்வகை புதிய
நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிகளை
அதிகரிக்க விரும்புகின்றோம்.
இறுதியாக எங்களுக்கும் நேயர்களுக்குமிடையிலான
நட்பு இமய மலை போல நீடுழி வாழ வேண்டும்
என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்.
அன்புடன்,
தி. கலையரசி.
அன்புடன்,
தி. கலையரசி.
தலைவர்,
தமிழ் பிரிவு,
சீன வானொலி.