

சீன வானொலியில் இடம்பெற்ற
சீன வானொலி நேயர் மன்ற
உறுப்பினர்களுக்காக இங்கே தொகுத்துத் தருகிறேன்:-
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சீன
வானொலியின் தமிழ் பிரிவு தலைவர் திருமதி.கலையரசி
மற்றும் அகில இந்திய சீன வானொலி மன்றத் தலைவர்
வளவனூர் திரு. எஸ்.செல்வம் ஆகியோர்!
கலையரசி:- வணக்கம் நேயர்களே!
இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில்
2006ம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெறும்
அ.இ.சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின்
18வது கருத்தரங்கு பற்றியும், சீன வானொலி
நிலையம், தமிழ் பிரிவு ஏற்பாடு செய்துள்ள
"மேற்கு சீனாவின் முத்து" என்ற
பொது அறிவுப்போட்டி குறித்தும்
கலையரசியும் வளவனூர் புதுப்பாளையம்
எஸ். செல்வமும் விவாதித்த நிகழ்ச்சியை
வழங்குகிறோம்.
செல்வம்:- அ.இ.சீன வானொலி தமிழ் நேயர்
மன்றத்தின் 18வது கருத்தரங்கம் நடத்த வேண்டிய
நேரம் நெருங்கிவிட்டதால் முதலில் அது பற்றிய
தகவல்களை நாம் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.
18வது கருத்தரங்கில் கலந்துகொள்ளும் சீன
வானொலி பிரதிநிதிக்குழுவில் யார் யார் எல்லாம்
இடம்பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலை முதலில்
தெரிவிக்க முடியுமா?
கலை:- மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
கருத்தரங்கில் கலந்துகொள்ள சீன வானொலியின்
ஆசிய பிரிவு துணைத்தலைவர் சுன் ஜியான் ஹி,
சீன வானொலியின் நேபாள தலைவர் ஜங் யூ
அம்மையார் அவர்களும் சிங்கள சீன வனொலி
செங் லீ அம்மையார் அவர்களும் இவர்களுடன்
நானும் (கலையரசி) (சுன் ஜுவான் குவா) ஆகிய
செல்வம்:- நேபாளதலைவர் ஏற்கனவே தமிழகத்தில்
சுற்றுப்பயணம் செய்து அறிமுகமானவர்தானே?
கலை:- ஆமாங்க..ஆமாங்க... இளையர்தான்...
செல்வம்:- உங்கள் பயணம் இறுதிப்படுத்தப்பட்டு
விட்டதா? அது பற்றி கொஞ்சம் நேயர்களுக்குச்
சொல்லுங்களேன்.
கலை:- ஆமாம். உறுதிப்படுத்தப்பட்டு
பணிப் பயணம் போய்விட்டு சென்னைக்கு
நவம்பர் மாதம் 16ம்தேதி இரவு சென்னை
வருகிறோம்.
செல்:- இரவு என்றால் நள்ளிரவு ஆகிவிடுமே!
கலை:- ஆமாம். 17, 18, 19 ல் தமிழகத்தில் முழுமையாக
இருப்போம். அப்ப நேயர்களைச் சந்திக்கலாம்.
செல் :- இரவு என்றால் நள்ளிரவு 12 மணிக்கு
கலை :- அமாங்க..ஆமாங்க ஆமாங்க..17, 18
செல்:- போகும்போது, தனித்தனியாக நேயர்களைச்
கலை :- ஆமாங்க..ஆமாங்க இது ஒரு நல்ல யோசனை.
கலை :-ஆமாங்க; அப்படிச் செய்தால் நேயர்களைச்
செல் :- ஆமாங்க..ஆமாங்க..ம்ம்..
கலை :- 19ம்தேதி ஈரோடு கருத்தரங்கை நடத்தி
முடித்துவிட்டு அங்கிருந்து இரவு எட்டுமணிக்குகோயம்புத்தூர் சென்று அங்கிருந்து சென்னை
வந்து 20ம்தேதி டெல்லி போய் அங்கிருந்து சீனா
திரும்ப திட்டமிட்டுள்ளோம். பணிப்பயணமானது
ரெம்ப கடினமானதாக அடுத்தடுத்து தொடர
வேண்டியுள்ளது.
செல்:- பிறகு முதலாவது ஆசியப் பிரிவின்
துணைத்தலைவர் மற்ற இரண்டு பிரிவின்
துணைத் தலைவர்களும் கலந்துகொள்கின்ற இந்தக்
கருத்தரங்கம் மற்ற இடங்களை விட சிறப்பானதாக
இருக்கவேண்டும். எவ்வளவு பேர்
கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சுமார் 500 பேர்கள்இருந்தால் நன்றாக இருக்கும்
இல்லீங்களா?
கலை:- ஆமாங்க. அதற்கு பல்வேறு நேயர்மன்றத்தின் தலைவர்கள்
இதற்கு முயற்சிசெய்ய வேண்டும்.
செல்:- ஏனென்றால் தமிழகம் முழுவதும் பிரதிநிதிகள்
சுற்றுப்பயணம் செய்ய இயலாத நிலையில்
அனைவரும் இந்த கருத்தரங்கை வாய்ப்பாக
வைத்துக்கொண்டு
இயன்றவரை அனைத்து நேயர்களும் இதில்
திறளாக கலந்து கொண்டு
சிறப்பித்தால் நன்றாக இருக்கும்.
கலை:-ஆமாங்க..ஆமாங்க..ம்ம்..
செல்:- அடுத்து வேறு தகவல்கள் நேயர்களுக்கு
உண்டுங்களா?
கலை:- ஆமாம்.. நாங்கள் ஏற்கனவே 2006ம்
ஆண்டிற்கான தமிழ் பிரிவு நடத்தும் அறிவுப்
போட்டி குறித்து அனுப்பியுள்ளோம். அதுபற்றி
அதிகாரப்பூர்வமாக அடுத்தவாரம்தெரிவிப்போம்.
செல்:- நேற்றுத்தான் எனக்கு போட்டி வினாத்தாள்கள்
வந்து சேர்ந்தது.
கலை:-ஓ! நேற்றுதான் கிடைத்ததா?
செல் :- ஆமாம். நேற்றுதான் கிடைத்தது.
"மேற்கு சீனாவின் முத்து" என்ற அறிவுப்போட்டி.
கடந்த பொது அறிவுப் போட்டிபோலவே நானும்
சீனவானொலி போல குழப்பம் இல்லாமல் தெளிவாக
உள்ளது. இதிலும் நேயர்கள் பிரச்னையின்றி
கலந்துகொள்ள முடியும். எட்டு கேள்விகள் சரியான
விடையை "டிக்" செய்து அனுப்ப வேண்டும்.
போட்டி இறுதிநாள் எது என்று சொல்லமுடியுமா?
கலை:- டிசம்பர் திங்கள் 30ம் நாள்! இந்த ஆண்டின்
கடைசி நாள்
செல் :-ஆனால் படிவத்தில் போட்டி இறுதிநாள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
கலை:-ஆமாம். சரி...முக்கியமான அறிவிப்பை
கருத்தரங்கு நடக்கும்போது அங்கு செய்யலாம்.
இந்த குறைபாட்டைப் நீக்கலாம்.
போட்டி எப்போது ஒலிபரப்பாகும்?
நான்கு நாட்கள் ஒலிபரப்பப்படும். அதன் பின்
இன்னொரு முறை இந்த ஒலிபரப்பின் மறு
ஒலிபரப்பாக ஒலிபரப்பாலாம்.
முறைகள்தானா?
வேண்டியது; இந்த போட்டிக்காக கிட்டத்தட்ட 60 ஆயிரம்
வினாத்தாள்கள் அனுப்பியுள்ளோம். நேயர்கள்
முழுமையாக எங்களுக்கு திருப்பி அனுப்பித் தரவேண்டும்.
"நானும் சீன வானொலியும் போட்டி" வினாத்தாள்கள்
நேயர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் அனுப்பிய வினாத்தாளகள் முழுமையாக
திரும்ப சீன வானொலியைச் சென்றடையவில்லை.
சென்றடையச் செய்ய வேண்டும். நேயர்கள்
பூர்த்தி செய்துமீதி வினாத்தாள்கள் இருந்தால்
அவற்றை பிற நேயர்களுக்கு கொடுத்து அவர்களை
அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளலாம்.
கலை:- ஆமாம். அப்படியும் செய்யலாம்; அடுத்தவாரம்
நடக்கும் போட்டியில் நேயர்கள் இந்தப் போட்டியில்
விறுவிறுப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்பது
என்ற என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்.
60ஆயிரம் வினாத்தாளகளையும் திருப்பி
அனுப்பிவைப்பதோடு தங்களுக்கு அனுப்பி
வைத்ததை மேலும் கூடுதல் நகலெடுத்து
சீன வானொலி அனுப்பியதைவிட கூடுதலாக
நேயர்கள் இந்த முறை அனுப்பிவைப்பார்கள்
என்று நம்புகிறேன். அதில் பிரச்னை இருக்காது.
பிரச்னைகளை விவாதித்தோம். இது தவிர
வேறு எதுவும் பிரச்னைகள் இருந்தால் மேலும்
சந்தித்து கலந்து ஆலோசிப்போம்.
விசயங்கள் குறித்து விவாதித்ததற்கும் நேயர்களுக்கு
தகவல் தெரிவிக்க உதவியதற்கும் நானும் நன்றி
தெரிவித்துக்கொள்கிறேன்.
( கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவு )
உங்கள் அன்பு நேயர்
ஆல்பர்ட்,
அமெரிக்கா.